மக்களவை தேர்தல் : 4 நாட்கள் டாஸ்மாக் விடுமுறை

மக்களவை தேர்தல் : 4 நாட்கள் டாஸ்மாக் விடுமுறை

டாஸ்மாக் 

மக்களவை தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் வருகிற 17, 18, 19-ந்தேதிகளிலும், வாக்கு எண்ணிக்கை நடைபெறும் ஜூன் 4-ந்தேதியும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. இதில் தமிழகத்துக்கு முதல் கட்டமாக வருகிற 19-ந்தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதையொட்டி தேர்தல் பிரசார களம் சூடுபிடித்துள்ளது. அரசியல் கட்சிகள் போட்டிப்போட்டுக்கொண்டு தங்கள் வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டி வருகின்றன. தேர்தல் பிரசாரம் வருகிற 17-ந்தேதியுடன் ஓய்கிறது. அதன்பின்னர் 19-ந்தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அன்றைய தினம் விளவங்கோடு சட்டமன்ற இடைத்தேர்தலும் நடைபெறுகிறது.

இதற்கிடையில் நாடாளுமன்ற தேர்தலையொட்டி தமிழகம் முழுவதும் டாஸ்மாக் மதுக்கடைகள் 4 நாட்கள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழக அரசின் உள்துறை முதன்மை செயலாளர் பி.அமுதா வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டிருப்பதாவது:- நாடாளுமன்ற தேர்தல் மற்றும் விளவங்கோடு சட்டமன்ற இடைத்தேர்தல் அமைதியாகவும், சமூகமாகவும் நடைபெறும் வகையில் தமிழகத்தில் வருகிற 17, 18, 19-ந்தேதிகளிலும், வாக்கு எண்ணிக்கை நடைபெறும் ஜூன் 4-ந்தேதியும் என மொத்தம் 4 நாட்கள் டாஸ்மாக் மதுக்கடைகள் மூடப்பட உள்ளன. மேற்கண்ட தேதிகளில் டாஸ்மாக் மதுக்கடைகள் மற்றும் அதுசார்ந்த பார்கள் அனைத்தும் மூடப்பட்டிருப்பதையும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உறுதிப்படுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags

Next Story