மக்களவை தேர்தல் : 7 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில் இயக்கம்

மக்களவை தேர்தல் : 7 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில் இயக்கம்

பைல் படம் 

மக்களவை தேர்தலையொட்டி 6 மற்றும் 7 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.
நாடாளுமன்ற தேர்தலை ஒட்டி சனிக்கிழமை அட்டவணைப்படி மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும். காலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை மெட்ரோ ரயில்கள் இயக்கபடுவதாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் அறிவித்துள்ளது. நெரிசல் மிகு நேரமான காலை 8 மணி முதல் காலை 11 மணி வரையிலும் மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் 6 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும். அதிகாலை 5 மணி முதல் காலை 8 மணி வரையிலும் காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை 7 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும்.

Tags

Next Story