மக்களவை தேர்தல் : பாப்பிரெட்டிபட்டியில் ஆய்வு கூட்டம்

மக்களவை தேர்தல் : பாப்பிரெட்டிபட்டியில் ஆய்வு கூட்டம்

ஆய்வு கூட்டம் 

பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட திருமண மண்டபங்கள் அச்சகங்கள் மற்றும் நகைக்கடை உரிமையாளர்களுக்கான தேர்தல் நடத்தை விதிகள் தொடர்பான ஆய்வுக் கூட்டம் தேர்தல் உதவி அலுவலர் தலைமையில் நடைபெற்றது.

இந்திய பாராளுமன்ற தேர்தல் 2024 முன்னிட்டு தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட மண்டபம், அச்சகம் மற்றும் நகை கடை உரிமையாளருக்கான தேர்தல் தொடர்பான நடத்தை விதிகள் குறித்து நேற்று தாலுகா அலுவலகத்தில், மண்டப, அச்சக, நகை அடகு கடை உரிமையாளர் களுக்கு ஆய்வு கூட்டம் நடந்தது.

இதில், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் செர்லினா ஏஞ்சலா தலைமை வகித்து பேசுகையில், மண்டபங்களில் ஆலோசனை கூட்டம் நடத்த, முறையாக தேர்தல் பிரிவில் அனுமதி பெற வேண்டும். அரசியல் கட்சி நிர்வாக கூட்டங்கள் அனுமதித்தல் கூடாது. கட்சி சார்ந்த கூட்டம் நடத்த அனுமதி பெற வேண்டும். காதுகுத்து போன்ற நிகழ்ச்சிகளில், அரசியல் பிரமுகர்கள் கலந்து கொண்டால், அனுமதி பெற வேண்டும்.

நிகழ்ச்சி நடக்கும்போது, மண்டபத்தின் அருகே கட்சி கொடிகள் பயன்படுத்த அனுமதி இல்லை. முறையற்ற பணி பரிவர்த்தனைக்கு இடம் அளிக்கக்கூடாது. நகை அடகு கடை முறையற்ற பண பரிமாற்றம் அனைத்தும் கண்காணிக்கப்படும். நகை அடகு வைப்பது தொடர்பாக முறையான ரசீது வாடிக்கையாளர்களுக்கு தரப்பட வேண்டும். இருப்பு வைத்திருக்கும் பணத்திற்கு முறையான கணக்கு வைத்திருக்க வேண்டும் என்றார்.

இந்த கூட்டத்தில், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர், தாசில்தார் சரவணன்,தேர்தல் துணை தாசில்தார் சிவன் ஞானம், ஆர்.ஐ., கார்த்திக் உள்ளிட்ட அச்சக, மண்டப, நகை அடகு கடை உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story