வாக்கு செலுத்த சொந்த ஊர்களுக்கு செல்லும் வட மாநில தொழிலாளர்கள்

மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு மே 7ஆம் தேதி நடைபெறுவதை முன்னிட்டு திருப்பூரில் பணியாற்றும் வட மாநில தொழிலாளர்கள் தங்களது சொந்த ஊருக்கு புறப்பட துவங்கியுள்ளனர்.
பின்னலாடை நகரமான திருப்பூரில் அதிகளவிலான வெளி மாவட்ட மற்றும் வெளி மாநில தொழிலாளர்கள் தங்கி பணியாற்றி வருகின்றனர், குறிப்பாக அசாம், பீகார், ஒடிசா, உத்தர் பிரதேஷ் மாநிலத்தை சேர்ந்த லட்சக்கணக்கான தொழிலாளர்கள் திருப்பூரில் தங்கி பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில் வருமே 7-ம் தேதி அசாம், பீகார், மேற்கு வங்காளம், சத்தீஸ்கர், குஜராத் உட்பட பல்வேறு மாநிலங்களில் தேர்தல் நடைபெறுகிறது. மூன்று நாட்கள் முதல் ஐந்து நாட்கள் வரை பயணம் செய்து சொந்த ஊருக்கு செல்பவர்கள் தேர்தலை முன்னிட்டு வாக்களிக்க இன்று முதல் பல்வேறு ரயில்களில் தங்களது சொந்த ஊருக்கு புறப்பட்டனர். இதனால் இன்று நண்பாத், தாதர், பிலாஸ்பூர் உள்ளிட்ட ரயில்களில் வட மாநிலத் தொழிலாளர்கள் வாக்களிக்க சென்றனர்.

Tags

Read MoreRead Less
Next Story