வேலூரில் டாஸ்மாக் கடைகள் மூட உத்தரவு - எதற்காக தெரியுமா?

வேலூரில் டாஸ்மாக் கடைகள் மூட உத்தரவு - எதற்காக தெரியுமா?

மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி 

வேலூர் மாவட்டத்தின் ஒரு சில டாஸ்மாக் கடைகளை வரும் 11ம் தேதி முதல் 13ஆம் தேதி வரை மூட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

ஆந்திர மாநிலத்தில் வருகிற 13-ஆம் தேதி பாராளுமன்ற பொது தேர்தல் நடைபெற உள்ளது. இதன் காரணமாக ஆந்திர மாநில எல்லைக்கு அருகே உள்ள வேலூர் மாவட்ட டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என ஆந்திர மாநில தலைமை தேர்தல் அலுவலர் வேலூர் ஆட்சியருக்கு கடிதம் மூலம் வலியுறுத்தி இருந்தார்.

அதனைத் தொடர்ந்து வேலூர் மாவட்டம் குடியாத்தம் வட்டத்தில் இயங்கி வரும் வி.எஸ்.புரம், தனகொண்ட பள்ளி, மோர்தானா டேம் மற்றும் காட்பாடி வட்டத்தில் எருக்கம் பட்டு, கணேஷ் நகர், பொன்னை, அண்ணாமலை நகர், சேர்க்காடு ஆகிய கடைகள் என மொத்தம் ஐந்து மதுபான சில்லறை விற்பனை கடைகளை வருகிற 11ஆம் தேதி காலை 10 மணி முதல் 13ஆம் தேதி இரவு 12 மணி வரை மூடி வைக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி உத்தரவிட்டுள்ளார்.

Tags

Read MoreRead Less
Next Story