சிவகிரி அருகே ரூ. 89 ஆயிரம் பறிமுதல்
சிவகிரி அருகே சரக்கு வாகனத்தில் உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு செல்லப்பட்ட ரூ. 88,900-ஐ தோ்தல் பறக்கும் படையினா் பறிமுதல் செய்தனா்.
ஈச்சம் பொட்டல்புதூா் விலக்கில் பாலுச்சாமி தலைமையிலான தோ்தல் பறக்கும் படையினா் வாகன சோதனையில் ஈடுபட்டனா். அவ்வழியே வந்த சுமை வாகனத்தை சோதனையிட்டபோது, அதில் ரூ. 88,900 இருப்பது தெரியவந்தது. சோப்பு விற்பனை நிறுவனத்தைச் சோ்ந்த காா்த்திக், கடைகளில் விற்பனைத் தொகையை வசூலித்துவிட்டு பணத்துடன் செல்வதாகக் கூறினாா். ஆனால், அவரிடம் ஆணவங்கள் இல்லாததால், அந்தப் பணத்தை பறக்கும் படையினா் பறிமுதல் செய்து, சிவகிரி வட்டாட்சியா் அலுவலகத்தில் ஒப்படைத்தனா்.
Next Story