அன்னதானப்பட்டியில் பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளை

அன்னதானப்பட்டியில்  பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளை

கோப்பு படம் 

அன்னதானப்பட்டியில் பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளையடித்து சென்றனர்.

சேலம் அன்னதானப்பட்டி ஆட்டுக்காரன்காடு பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது27). இவர் தனது மகனுக்கு உடல்நிலை சரியில்லாததால் சேலம் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்துள்ளார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கடந்த 28-ந்தேதி வீட்டை பூட்டி விட்டு மகனுடன் ஆஸ்பத்திரியில் இரவு தங்கினார். மறுநாள் காலையில் வீட்டிற்கு சென்றார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்த போது பிரோவில் இருந்த 2 பவுன் தங்க நகை, வெள்ளி கொடி, கொலுசு ரூ.5 ஆயிரம் காணவில்லை,

ஆஸ்பத்திரிக்கு சென்று தங்கி இருந்த நேரத்தில் மர்ம நபர்கள் வீட்டிற்குள் புகுந்து அவற்றை திருடி சென்றிருப்பது தெரியவந்தது. இது குறித்து மணிகண்டன் அன்னதானப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Tags

Next Story