திருப்பூரில் அருள்மிகு விஸ்வேஷ்வரா சுவாமி வைகாசி விசாக தேரோட்டம்

திருப்பூரில் அருள்மிகு விஸ்வேஷ்வரா சுவாமி வைகாசி விசாக தேரோட்டம்

வைகாசி தேரோட்டம்

திருப்பூரில் அருள்மிகு விஸ்வேஸ்வர சுவாமி வைகாசி விசாக தேரோட்டம் நடைபெற்றது.

திருப்பூரில் அருள்மிகு விஸ்வேஷ்வர சுவாமி வைகாசி விசாக தேரோட்டம். அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் சோமஸ்கந்தர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருத்தேரை வடம் பிடித்து இழுத்து நமச்சிவாயா கோஷத்துடன் சாமி தரிசனம். திருப்பூர் அருள்மிகு விஷ்வேஷ்வர சுவாமி திருக்கோவில் வைகாசி விசாக தேர் திருவிழா கடந்த 17-ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது, இரண்டாம் நாள் திருவிழாவில் சுவாமி புறப்பாடும், 3-ம் நாள் திருவிழாவில் சுவாமி இராவணேஸ்வரர் வாகனம்,காமதேனு வாகனம் ,சேஷ வாகனத்தில் எழுந்தருளியும்,

இன்று ஐந்தாம் நாள் திருவிழாவில் பஞ்ச மூர்த்திகள் புறப்பாடும் வெகு விமரிசையாக நடைபெற்றன. இன்று முக்கிய நிகழ்வான ஈஸ்வரன் கோவில் தேரோட்டம் நடைபெற்றது, விஷ்வேஷ்வரர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக பூஜைகள் நடைபெற்றன தொடர்ந்து சிறப்பு அலங்காரத்துடன் சோமஸ்கந்தர் திருத்தேரில் எழுந்தருளி பக்தர்களுக்குஅருள்பாலித்தார். அலங்கரிக்கப்பட்ட திருத்தேரின் முன்புறம் திருக்கயிலாய வாத்தியங்கள் இசைத்தும், கோலாட்டம்,கேரள கலைஞர்களின் நடனம்,

பெண்கள் கும்மி ஆட்டம், உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன,தொடர்ந்து திருத்தேரினை ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து நமச்சிவாயா கோஷத்துடன் சாமி தரிசனம் செய்தனர், திருத்தே ரானது ஈஸ்வரன் கோவில் வீதி,கே எஸ் சி பள்ளி வீதி,காமராஜர் வீதி உள்ளிட்ட முக்கிய வீதிகள்வழியாக வடம் பிடித்து இழுத்து வரப்பட்டு தேர் திடலை அடைந்து திருத்தேரோட்டம் நடைபெற்றது,

முன்னதாகஅனைத்து சிவனடியார்கள் கூட்டமைப்பு சார்பில் வைகாசி விசாக தேர் திருவிழாவை முன்னிட்டு திருப்பூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற விழாவில் அம்மையப்பர் வழிபாடு ,திருமுறை பாராயணம் நடைபெற்றது. தொடர்ந்து ஆதீனங்கள் மற்றும் சான்றோர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.

இதில் கூனம்பட்டி திருமடம் ஸ்ரீலஸ்ரீ நடராஜ சுவாமிகள், கோவை சிரவை ஆதீனம் ராமானந்த குமர குருபர சுவாமிகள், தென்சேரிமலை ஆதீனம் முத்து சிவராமசாமி உள்ளிட்ட ஐவருக்கு விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டன. தொடர்ந்து விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டன.

Tags

Next Story