ராணிப்பேட்டை: விபத்து - 18க்கும் மேற்பட்டோர் காயம்!

அரசு மருத்துவமனை

அரசு மருத்துவமனை
ராணிப்பேட்டை அருகே லாரி மீது பேருந்து மோதி விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாப்பேட்டை அருகே சுங்கசாவடி பகுதியில் சாலையில் கண்டெய்னர் லாரி ஒன்று நின்று கொண்டிருந்துள்ளது. அப்போது அந்த வழியாக தொழிற்சாலைக்கு பணியாளர்களை ஏற்றி சென்ற பேருந்து கண்டெய்னர் லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 18-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து வாலாஜாப்பேட்டை அரசு தலைமை மருத்துவமனையில் 108 ஆம்புலன்ஸ் மூலம் அழைத்துச் செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அங்கு அனைவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில் விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் விபத்துக்குள்ளான வாகனங்களை போலீசார் அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர்.
Next Story


