லாரி டிரைவர் மண்டை உடைப்பு - வேலை நிறுத்தம்

லாரி டிரைவர் மண்டை உடைப்பு - வேலை நிறுத்தம்

ஓட்டுநர் பிரபு 

செம்பனார்கோவில் முடி திருச்சம்பள்ளியில் உள்ள இந்திய உணவு கிடங்கில் லாரி ஓட்டுனருக்கும் சுமைத்தூக்கு தொழிலாளர்களுக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் ஓட்டுநர் மண்டை உடைக்கப்பட்டதை கண்டித்து லாரி ஓட்டுனர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

மத்திய அரசு, மாநித்திற்கு வழங்கும் மத்திய தொகுப்பு திட்டத்திற்கான அரிசி மத்திய அரசின் இந்திய உணவு கழகம் மூலம் மாநில அரசுகளுக்கு அனுப்பி வைக்கப்படும். அவ்வாறு தமிழகத்திற்கு வரும் அரிசியை இந்திய உணவு கழக கிடங்குகளில் அடுக்கி வைக்கப்படும் அங்கிருந்து தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் மூலம் ரேஷன் கடைகளுக்கு விநியோகிக்கப்படுவது வாடிக்கை. அதேபோன்று பஞ்சாப் மாநிலம் இந்திய உணவு கழகத்திடமிருந்து 3ஆயிரம் டன் புழுங்கல் அரிசி மூட்டைகள் நேற்று மயிலாடுதுறை ரயில் நிலையத்திற்கு சரக்கு ரயில்மூலம் வந்து சேர்ந்தது.

மயிலாடுதுறை ரயில் நிலையத்திலிருந்துஅரிசி மூட்டைகளை லாரிகளில் ஏற்றி செம்பனார்கோவில் அருகே திருச்சம்பள்ளியில் உள்ள இந்திய உணவுக் கழகம் கிடங்கிற்கு கொண்டு செல்லப்பட்டது. முதல் லாரியில் மூட்டைகளை ஏற்றிச் சென்ற லாரி டிரைவர் மணல்மேடு பகுதியைச் சேர்ந்த பிரபு (38) கிடங்கில் லாரியை நிறுத்தி விட்டு கீழே இறங்கி மூட்டைகளை இறக்குவதற்காக மூட்டையின் மேல் கட்டியிருந்த படுதாவை அவிழ்த்துள்ளார். மூட்டைகளை இறக்கும் பணிக்காக பாண்டிச்சேரியில் இருந்து இரண்டு வேன்களில் இந்திய உணவுக் கழக சுமைதூக்கும் தொழிலாளர்கள் 80 பேர் அழைத்துவரப்பட்டிருந்தனர்.

மூட்டையை இறக்குவதற்கு ஏதுவாக லாரியை நகர்த்தி நிறுத்துமாறு டிரைவர் பிரபுவிடம் அவர்கள் கூறியுள்ளனர். தான் தார்பாயை அவிழ்த்து கொண்டிருப்பதாகவும் அவிழ்த்து விட்டு வந்து லாரியை நகர்த்துகிறேன் என்று கூறிய போது சுமைதூக்கும் தொழிலாளிகள் ஒருவர் பின் ஒருவராக வந்து லாரியை நகர்த்துமாறு கூறியதால் பிரபுவுக்கும் சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் சுமை தூக்கும் தொழிலாளர்கள் சேர்ந்து பிரபுவை தாக்கியதால் அவரது மண்டை உடைந்துள்ளது. பிரபு லாரிக்கு பின்னால் வந்த லாரி ஓட்டுனர்கள் இதைக்கண்டு சண்டையை விலக்கி பிரபுவை அவர்களிடமிருந்து மீட்டு மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு பிரபுவுக்கு நான்கு தையல் போடப்பட்டுள்ளது. இச்சம்பவத்தால் லாரி ஓட்டுனர்கள் மூட்டைகளை கிடங்கில் இறக்காமல் லாரியை நிறுத்திவிட்டு போராட்டத்தில் ஈடுபட்’டனர்.

இரு தரப்பினரிடையே மோதல் ஏற்படும் சூழல் ஏற்பட்டதால் வாயில் கதவு மூடப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த செம்பனார்கோவில் போலீசார் இரு தரப்பினரிடையே பேச்சுவார்த்தை நடத்தினர். பிரபுவை தாக்கிய சுமைதூக்கும் தொழிலாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தால் மட்டுமே கிடங்கில் மூட்டைகளை இறக்கி வைப்போம் என்று தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இச்சம்பவம் தொடர்பாக பாண்டிச்சேரி சேர்ந்த சுமை தூக்கும் தொழிலாளர்கள் செல்வம் சிவபெருமாள், ராதாகிருஷ்ணன் ஆகிய 3 நபர்களை பிடித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். சுமைத்தூக்கும் தொழிலாளர் சங்கம் மற்றும் லாரி ஓட்டுநர் சங்கத்தினரும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர் எந்த முடிவும் ஏற்படவில்லை இதனால் மூடைகள் இறக்கப்படவில்லை . இன்று 3 நபர்களும் கைது செய்யப்பட்ட பிறகே மூடைகள் இறக்கப்படும் என கூறப்படுகிறது.

Tags

Next Story