இளநீர் லாரி கடத்தல் - 2 மணி நேரத்தில் பிடித்த காவல் துறையினர்.
மீட்கப்பட்ட லாரி
கர்நாடக மாநிலத்தை சேர்ந்த 45 வயதான ஜெகன் நாத் தினமும் மைசூரில் இருந்து இள நீரை லாரியில் ஏற்றி கொண்டு கோயம்பேடு மற்றும் சென்னை அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள கடைகளுக்கு இறக்கி விட்டு செல்வதை வழக்கமாக கொண்டிருந்தார். இந்த நிலையில் மைசூரில் இருந்து இளநீரை ஏற்றிக்கொண்டு கிளம்பியவர் கோயம்பேடு மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் இளநீரை இறக்கிவிட்டு கோயம்பேடு, 100 அடி சாலை அருகே வாகனத்தை சாலை ஓரம் நிறுத்திவிட்டு டீ குடித்து கொண்டிருந்தார்.
அப்போது அந்த வழியாக வந்த மர்ம நபர் இளநீர் ஏற்றி வந்த லாரியில் சாவியுடன் இருப்பதை கண்டு அந்த வாகனத்தை திருடி கொண்டு சென்றார். இதனைக் கண்டதும் வாகனத்தை விரட்டி சென்று மடக்கி பிடிக்க முடியாததால் கோயம்பேடு காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு லாரியை கடத்தி செல்வதாகவும் அந்த வாகனத்தின் நம்பரை அளித்தனர் இதையடுத்து பல்வேறு இடங்களில் சோதனையில் ஈடுபட்ட காவல் துறையினர் கொரட்டூர் பகுதியில் வந்த வாகனத்தை மடக்கி பிடித்து விசாரித்த போது லாரியை ஓட்டி வந்த நபர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார்.
மேலும் கோயம்பேட்டில் இருந்து திருடப்பட்டு வந்த லாரி என்பது தெரியவந்ததையடுத்து லாரியையும் லாரியை திருடி வந்த நபரையும் கோயம்பேடு காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர். விசாரணையில் லாரியை கடத்தி சென்றது நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த 38 வயதான அருள், என்பது தெரியவந்தது இதையடுத்து அந்த நபரை கைது செய்த காவல் துறையினர் திருடி செல்லப்பட்ட லாரியையும் மீட்டு லாரியை மீட்டு இவர் மீது வேறு ஏதேனும் குற்ற சம்பவங்கள் உள்ளதா என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சாலையோரம் நிறுத்திவிட்டு டீ குடிக்கும் நேரத்தில் இளநீர் ஏற்றி வந்த லாரியை திருடி சென்ற சம்பவத்தில் இரண்டு மணி நேரத்தில் மீட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.