லாரி மோதி மின்கம்பி சேதம் -மின் தடையால் மக்கள் அவதி

லாரி மோதி மின்கம்பி சேதம் -மின் தடையால் மக்கள் அவதி
மின் கம்பியில் மோதிய லாரி 
கடையத்தில் லாரி மோதி சேதமான மின் கம்பிகளை சீரமைக்கும் பணிகளில் மின் வாரிய ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
தென்காசி மாவட்டம் கடையத்திலிருந்து தென்காசி மெயின் ரோடு வழியாக கண்டெய்னர் லாரி ஒன்று இன்று சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த வழியாக வந்த லாரியானது கடையம் பஸ் நிலையம் அருகில் உள்ள வளைவு பகுதியில் சென்ற போது மின் கம்பியின் மீது மோதியதால் மின் தடை ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதியில் மின் தடை செய்யப்பட்டது அதை தொடர்ந்து கடையம் மின்வாரிய ஊழியருக்கு தகவல் தெரிவித்தனர் விரைந்து சென்ற மின் ஊழியர்கள் மின் சீரமைப்பு பணிகளில் ஈடுபட்டு வந்தனர். தொடர் மின் தடையால் பொதுமக்கள் பெரும் அவதிப்பட்டனர் . இதனால் இந்த வழியாக செல்லக்கூடிய லாரிகளை தடை செய்து வேற மாற்றுப்பாதையில் செல்ல வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்தனர்.

Tags

Next Story