வெள்ளகோவில் ஒத்தக்கடையில் திடீரெனெ தீப்பிடித்து எறிந்த கோழித்தீவனம் ஏற்றிவந்த லாரி
வெள்ளகோவில் கரூர் சாலையில் இன்று மாலை கோழி தீவனம் ஏற்றி கொண்டு லாரி சென்றுள்ளது. அந்த லாரியானது கோவையில் உள்ள கோழி தீவனம் தயாரிக்கும் தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான. இன்று 310 முட்டைகளில் 19 டன் அளவிலான கோழி தீவனங்கள் ஏற்றி கொண்டு கோவை அருகே பாப்பம்பாடியில் இருந்து ஒரத்தநாட்டிற்கு கொண்டு செல்ல வெள்ளகோவில் வழியாக வந்துள்ளது. லாரியை கனகராஜ் (53) என்பவர் ஓட்டிவந்துள்ளார்.
இந்நிலையில் வெள்ளகோவில் அடுத்துள்ள ஒத்தக்கடை பகுதியில் வரும் பொழுது லாரியில் ஒயர் கரும் வாசம் வந்துள்ளது. இதை அடுத்து சுதாரித்து கொண்ட ஓட்டுநர் வாகனத்தை மெதுவாக இயக்கியபடியே ஓட்டுநர் பகுதியிலும் லாரியின் பின் பகுதியையும் பார்த்துள்ளார். அப்போது பின்பகுதிகளில் இருந்து லேசாக புகைவருவதை பார்த்த ஓட்டுநர் கனகராஜ் லாரியை நிறுத்த பார்க்கையில் லாரிக்கு பின்புறம் அதிகப்படியான வாகனங்கள் வந்தவண்ணம் இருந்ததையும் சாலையின் இடதுபுறம் சாலை விரிவாக்க பணிகள் நடைபெறுவதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் சுதாரித்து கொண்டு சாலையில் வலதுபுறம் லாரியை நிறுத்தும் அளவிற்கு இடத்தை தேர்ந்தெடுத்து சாதுர்யமாக லாரியை எதிர் திசையில் நிறுத்திவிட்டு தர்ப்பையை நிக்க முயற்க்கையில் லாரியில் அதிகப்படியான தீ பிடித்திருப்பதை கண்டு அச்சமடைந்தார்.
பின்னர் அருகில் இருந்தவர்கள் ஓட்டுனரை காப்பாற்றி வெள்ளகோவில் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு தீயணைப்பு நிலைய அலுவலர் பிரபாகரன் தலைமையில் வந்த தீயணைப்பு வீரர்கள் 30 நிமிடங்கள் போராடி தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். அனால் லாரி முன்பகுதி முழுவது எறிந்துவிட்டு பின் பகுதியில் கோழி தீவனங்கள் பாதி எறிந்துவிட்டது. இதில் பலலட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமாகியது.தேசிய நெடுஞ்சாலை என்பதால் 30 நிமிடங்கள் போக்குவரத்து பாதிப்படைந்தது. லாரி தீப்பிடித்து எரிந்து வெள்ளகோவில் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.