மஞ்சவாடிகணவாய் அருகே லாரி கவிழ்ந்து டிரைவர் படுகாயம்

மஞ்சவாடிகணவாய் அருகே லாரி கவிழ்ந்து டிரைவர் படுகாயம்
விபத்தில் சிக்கிய லாரி
மஞ்சவாடிகணவாய் அருகே லாரி கவிழ்ந்து டிரைவர் படுகாயம் அடைந்தார்.

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி ஒடசல்பட்டியை சேர்ந்தவர் சின்னசாமி (51), லாரி டிரைவர். இவர் நேற்று இரவு அரூரில் இருந்து செங்கல் லோடு ஏற்றிக்கொண்டு சேலம் நோக்கி வந்துக்கொண்டிருந்தார்.

இன்று அதிகாலை 1 மணியளவில் மஞ்சவாடி கணவாய் பகுதியில் வந்த போது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் டிரைவர் படுகாயமடைந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.

உடனடியாக அவர் மீட்கப்பட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இங்கு சின்னசாமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து பாப்பிரெட்டிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story