தூங்கி கொண்டிருந்தவர்கள் மீது ஏறிய லாரி - வட மாநில தொழிலாளி பலி
மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து வந்த 33 பேர் உளுந்துார்பேட்டையில் சென்னை மெயின் ரோடு அருகே ஐயன் வாட்டர் சர்வீஸ் கடை அருகே தங்கியுள்ளனர். இவர்கள் ரயில்வேயில் ஸ்லீப்பர் சிமெண்ட் கட்டைகளை உடைக்கும் வேலையில் ஈடுபட்டுள்ளனர். நேற்று முன்தினம் இரவு வாட்டர் சர்வீஸ் கடை அருகே நிறுத்தப்பட்டிருந்த லாரியின் பின்னால் தார்பாயில் படுத்து துாங்கிக் கொண்டிருந்தனர்.
இரவு 11:30 மணியளவில் திண்டுக்கல் மாவட்டம் பழனி அடுத்த சுக்குநாயக்கம்பட்டி பகுதியைச் சேர்ந்த பாண்டியன் மகன் ஜீவானந்தம், 28; மது போதையில் டிப்பர் லாரியை பின்பக்கமாக எடுத்தபோது, மகாராஷ்டிரா மாநிலம், கோண்டியா மாவட்டம், பிப்பர் தோலா பகுதியை சேர்ந்த கவுரிசங்கர், 35; கிஷோர் மதன்லால்அவுராசே, 39; ஆகியோர் மீது டிப்பர் லாரி ஏறியது. இதில் சம்பவ இடத்திலேயே கவுரிசங்கர் இறந்தார். படுகாயமடைந்த கிஷோர் மதன்லால் அவுராசே உளுந்துார்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். உளுந்துார்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து டிப்பர் லாரி டிரைவர் ஜீவானந்தத்தை கைது செய்தனர்.