ஆன்லைன் அபராதத்தை கண்டித்து லாரி ஸ்டிரைக்

தமிழக அரசு அறிவித்துள்ள 40 சதகககவீத கூடுதல் சேவை மற்றும் ஆன்லைன் அபராதத்தை தடுத்து நிறுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 3000 லாரிகள் வேலை நிறுத்தம்!

தமிழ்நாடு லாரி உரிமையாளர் சம்மேளனம் மற்றும் தூத்துக்குடி சிட்டி லாரி புக்கிங் ஏஜென்ட் அசோசியேசன் உள்ளிட்ட சார்பில் தமிழக அரசை கண்டித்து தமிழக அரசு உயர்த்தி உள்ள காலாண்டு சேவைக்கான வரி 40 சதவீதம் உயர்த்தி உள்ளதை திரும்ப பெற வேண்டும் ஆன்லைன் மூலம் அபராதம் விதிப்பதை கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் இதன் காரணமாக 3000 லாரிகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர் இதன் காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தின் முக்கியத்துடன் உப்பு ஏற்றுமதி தீப்பெட்டி ஏற்றுமதி ஆகியவை இன்று நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதுடன் தீபாவளி பண்டிகை சில நாட்களில் வர உள்ளதால் அத்தியாவசிய பொருட்களுக்கான லாரிகள் மட்டும் இயங்க அனுமதித்துள்ளனர். மேலும் தமிழக அரசு உடனடியாக கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் கால வரையத்த வேலை நிறுத்தம் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட உள்ளதாக மாநில லாரி உரிமையாளர் சம்மேளன இணைச் செயலாளர் சுப்புராஜ் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story