பங்குசந்தையில் நஷ்டம் - பள்ளி தாளாளர் தற்கொலை

பங்குசந்தையில் நஷ்டம் - பள்ளி தாளாளர் தற்கொலை

பைல் படம் 

கள்ளக்குறிச்சியில் உள்ள லாட்ஜில் தனியார் பள்ளி தாளாளர் துாக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
செங்கல்பட்டு மாவட்டம் பொத்தேரியைச் சேர்ந்தவர் மோகன்,55; ஊரப்பாக்கத்தில் தனியார் பள்ளி நடத்தி வருகிறார். கடந்த 14ம் தேதி மாலை மோகன் வேலுாருக்குச் செல்வதாக அவரது மனைவி கஜலட்சுமியிடம் கூறிவிட்டு புறப்பட்டார். இந்நிலையில், 15ம் தேதி மாலை 6:00 மணியளவில் கள்ளக்குறிச்சி தனியார் லாட்ஜில் பணிபுரியும் ஊழியர்கள், மோகன் துாக்கு போட்டுக்கொண்டதாக அவரது மனைவிக்கு போன் மூலம் தகவல் தெரிவித்தனர். கள்ளக்குறிச்சி போலீசார் நேரில் சென்று விசாரணை நடத்தியதில், பங்கு சந்தை முதலீட்டில் ஏற்பட்ட நஷ்டத்தால் மனஉளைச்சலில் மோகன் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிந்தது. புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Tags

Next Story