அத்துமீறிய வசூல்; மாநகராட்சிக்கு வரும் வருமான இழப்பு

அத்துமீறிய வசூல்; மாநகராட்சிக்கு வரும் வருமான இழப்பு

திண்டுக்கல் மாட்கெட்டிற்கு விவசாயிகள் கொண்டுவரும் விளைபொருட்களுக்கு அத்துமீறி கட்டணம் வசூலிக்கப்படுவதால், மாநகராட்சிக்கு வருமான இழப்பு உண்டாகிறது.

திண்டுக்கல் மாட்கெட்டிற்கு விவசாயிகள் கொண்டுவரும் விளைபொருட்களுக்கு அத்துமீறி கட்டணம் வசூலிக்கப்படுவதால், மாநகராட்சிக்கு வருமான இழப்பு உண்டாகிறது.
திண்டுக்கல்லின் மையப்பகுதியில் காந்தி காய்கறி மார்க்கெட் அமைந்துள்ளது. இந்த மார்க்கெட்டிற்கு திண்டுக்கலை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களிலிருந்து விவசாயிகள் தங்களது விளைநிலங்களில் விளையக்கூடிய காய்கறிகளை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். இந்த காய்கறி மார்க்கெட்டின் நுழைவு வாயிலில் தலை சுமை, இருசக்கரம் மற்றும் கனரகங்களில் வரும் மூட்டை ஒன்றிற்கு ஐந்து ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதை வசூலிப்பவர் மற்றும் ஆணையாளர் யாருடைய கையெழுத்தும் இல்லாமல் ஒரு நாளைக்கு பல ஆயிரம் ரூபாய் மாநகராட்சிக்கு இழப்பு ஏற்படுத்தி வருகின்றனர் .
Next Story