இடைத்தரகர்களால் நஷ்டம்; விவசாயிகள் கஷ்டம்

சிறுமலைப்பகுதியில் இடைத்தரகர்களால் அழிந்து வரும் காபி விவசாயத்தை மீட்டு, தங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.
திண்டுக்கல் சிறுமலைப்பகுதியில் இடைத்தரகர்களால் அழிந்து வரும் காபி விவசாயத்தை மீட்டு, தகுந்த நடவடிக்கை எடுத்து தங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுக்கின்றனர். திண்டுக்கல் மாவட்டம் சிறுமலை புதூர் பகுதி மக்களின் முக்கிய வாழ்வாதாரமாக விளங்குவதில், காபி கொட்டைகள் பயிரிடுதலும் ஒன்றாகும் இப்பகுதியில் 20,000 ஏக்கருக்கும் மேலாக காப்பி பயிரிடப்பட்டுள்ளது. இங்கு வாழும் மக்கள் காப்பி, வாழை, பலா, எலுமிச்சை, மிளகு போன்றவற்றை முக்கிய பயிர்களாக பயிரிட்டு விவசாயம் செய்து வருகின்றனர். இதில் அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாக காபி விவசாயம் விளங்குகிறது.ஆனால் தங்களிடம் கிலோ 60 ரூபாய்க்கு இடைத்தரகர்கள் வாங்குவதாகவும் எனவே வருமானம் குறைந்த அளவே கிடைக்கின்றது எனவும் விவசாயிகள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.

Tags

Next Story