லாட்டரி விற்ற வியாபாரிக்கு சிறை தண்டனை: நீதிமன்றம் தீர்ப்பு

லாட்டரி விற்ற வியாபாரிக்கு சிறை தண்டனை: நீதிமன்றம் தீர்ப்பு

கைது

ஆறுமுகநேரி பெட்டிக்கடையில் தடைசெய்யப்பட்ட லாட்டரி விற்ற வியாபாரிக்கு 3 நாள் சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து திருச்செந்தூர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.

தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகநேரி எஸ்.எஸ்.கோவில் தெற்கு தெருவை சேர்ந்தவல்லமுத்து மகன் இசக்கிமுத்து (62). வியாபாரி. இவர் ஆறுமுகநேரி பஜாரில் பெட்டிக்கடை நடத்தி வருகிறார். இவரது கடையில் தடை செய்யப்பட்ட வெளிமாநில லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து வந்துள்ளார்.

கடந்த மே மாதம் 9-ந் தேதி இவர் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்று கொண்டிருந்தபோது, ஆறுமுகநேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து கைதுசெய்தனர். இதை தொடர்ந்து இவர் மீதான வழக்கு திருச்செந்தூர் கோர்ட்டில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கு விசாரணை முடிந்து நேற்று முன்தினம் நீதிபதி வரதராஜன் தீர்ப்பு கூறினார்.

இதில், அவருக்கு 3 நாட்கள் சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து ஆறுமுகநேரி போலீசார் வல்ல முத்துவை கைது செய்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர்.

Tags

Next Story