லாட்டரி விற்பனை; 2 பேர் கைது

லாட்டரி விற்பனை; 2 பேர் கைது

பைல் படம் 

தூத்துக்குடியில் தடைசெய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனையில் ஈடுபட்ட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடி லெவிஞ்சிபுரம் பகுதியில் தென்பாகம் காவல் ஆய்வாளா் மாரிமுத்து தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, அப்பகுதியில் சந்தேகத்துக்கிடமாக நின்றிருந்த இளைஞரைப் பிடித்து விசாரித்தனர். விசாரணையில், அவா் அதே பகுதியைச் சோ்ந்த மாரியப்பன் மகன் நவராஜன்(35) என்பதும், தடைசெய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளின் எண்களை எழுதி விற்பனையில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார், அவரிடமிருந்து 9 லாட்டரி எண்கள் எழுதப்பட்ட துண்டு சீட்டுகள், ரூ.250 ஆகியவற்றை பறிமுதல்செய்தனர்.

இதேபோன்று, தென்பாகம் காவல் உதவி ஆய்வாளா் ஆா்தா் ஜஸ்டின் சாமுவேல்ராஜ் தலைமையிலான போலீசார் திருச்செந்தூா் சாலையில் உள்ள ஒரு தனியாா் மண்டபம் அருகே சந்தேகப்படும்படியாக நின்றிருந்த நபரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில், அவா் சாத்தான்குளம் அருகே உள்ள பழனியப்பபுரத்தைச் சோ்ந்த முத்துமணி மகன் துரைசிங்(35) என்பதும், அவா் தடைசெய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளின் எண்களை எழுதி விற்பனையில் ஈடுபட்டதும் தெரியவந்தது.

இதையடுத்து அவரைக் கைது செய்த போலீசார், அவரிடமிருந்து 7 லாட்டரி சீட்டு எண்கள் எழுதிய துண்டு சீட்டு, ரூ.1240 ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும், இது குறித்து போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Tags

Next Story