காதல் திருமணம்; கொலை செய்தவர்களை குண்டர் சட்டத்தில் தண்டிக்கணும்
எரங்காட்டூர் காதல் திருமணம் செய்து கொண்ட மகள் கணவரின் தங்கையை வேன் ஏற்றி கொலை செய்த நபர்களை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க வேண்டும் ஆதித்தமிழர் பேரவை நிறுவன தலைவர் அதியமான் செய்தியாளர் சந்திப்பின்போது பேட்டி அளித்தார்.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த எரங்காட்டூர் சேர்ந்த ஜெயபிரகாஷ் என்பவரின் மகன் சுபாஷ் என்பவர் சத்தியமங்கலம் காந்தி நகர் சேர்ந்த சந்திரன் என்பவரின் மகள் மஞ்சுவை கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டார். இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் இந்த நிலையில் மகளின் காதல் திருமணத்தை ஏற்றுக் கொள்ளாத தந்தை சந்திரன் திட்டமிட்டு சுபாஷ் மற்றும் அவரது தங்கையான ஹாசினியை கொலை செய்யும் நோக்கத்தில் பிக்கப் வேன் ஏற்றி கொலை செய்ய திட்டமிட்டு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த இருவரையும் பிக்கப் வேனில் மோதியதில் சுபாஷ் தங்கை 15வயது சிறுமி ஹாசினி படுகாயம் அடைந்து சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த கொலை தொடர்பாக மஞ்சுவின் தந்தை சந்திரன் தாய் சித்ரா உட்பட ஆறு பேரை பவானிசாகர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்த நிலையில் ஆதித்தமிழர் பேரவை கட்சி நிறுவனத் தலைவர் அதியமான் மற்றும் நிர்வாகிகள் இன்று ஹாசினியின் இல்லத்திற்கு சென்று ஹாசினியின் தந்தை தாய் ஆகியோருக்கு ஆறுதல் கூறினார் அதனை தொடர்ந்து செய்தியாளர் சந்திப்பின் போது ஆதித்தமிழர் பேரவை கட்சியின் நிறுவனத் தலைவர் அதியமான் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்த இருவரும் காதல் திருமணம் செய்து கொண்ட நிலையில் அவர்களின் காதல் திருமணத்தை ஏற்றுக் கொள்ளாத மகளின் தந்தை ஆணவக் கொலை செய்துள்ளார்.
இதை ஆணவக் கொலை என பதிவு செய்து குற்றவாளிகள் 6 பேர் மீதும் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க வேண்டும். அவர்கள் வெளியே வராத வகையில் அவர்களுக்கு ஜாமின் வழங்கக் கூடாது. ஆணவக் கொலை சட்டமுறை படுத்த வேண்டும் . இது குறித்து வருகின்ற நாடாளுமன்ற தேர்தலுக்குப் பின் நடைபெற உள்ள சட்டமன்ற கூட்டத்தொடரில் ஆணவக் கொலை சட்ட முறைப்படுத்த ஆதித்தமிழர் பேரவை சார்பில் வலியுறுத்தப்படும் என செய்தியாளர் சந்திப்பின் போது பேட்டி அளித்துள்ளார்.