குறைந்த அளவே அகப்படும் மீன்கள் - அதிராம்பட்டினம் மீனவர்கள் கவலை
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் கடற்பகுதியான தம்பிக்கோட்டை மறவக்காடு, அதிராம்பட்டினம் கரையூர் தெரு, காந்திநகர் ஆறுமுக கிட்டங்கி தெரு, தரகர் தெரு, கடற்கரை தெரு, ஏரிப்புறக்கரை, கீழத்தோட்டம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மீனவர்கள் நாட்டுப் படகுகள் மூலம் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர். மீன்வர்கள் பிடித்து வரும் மீன்கள் அதிராம்பட்டினம் மார்க்கெட்டுக்கும் கொண்டு செல்லப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் வெளிமாவட்டங்களுக்கு விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகிறது.
இந்த நிலையில் கடந்த 10 நாட்களில் கடலில் மீன் வரத்து இல்லாமல் ஏமாற்றத்துடன் மீனவர்கள் திரும்பி வருகின்றனர். மீன்கள் வரத்து குறைவினால் அதிராம்பட்டினம் மார்க்கெட்டுக்கு வரும் பொதுமக்கள் மீன்கள் இல்லாததால் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர். நேற்று கடலுக்கு சென்ற மீன்வர்களுக்கு குறைந்த அளவு மீன்கள் சிக்கியதால் கவலை அடைந்தனர். மீன்கள் வரத்து குறைவினால் அதிராம்பட்டினம் மார்க்கெட்டுக்கு வரும் பொதுமக்கள் மீன்கள் இல்லாததால் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.
நேற்று மார்க்கெட்டுக்கு வளர்ப்பு இறால் அதிக அளவில் விற்பனைக்கு வந்தது. ஆனால் ஒரு கிலோ இறால் ரூ.400-க்கு விற்பனை செய்யப்பட்டது. விலை அதிகம் இருந்ததாலும் அசைவப்பிரியர்கள் ஆர்வமுடம் வாங்கி சென்றனர். இதுகுறித்து ஏரிப்புறக்கரை கிராமத்தை சேர்ந்த மீனவர்கள் கூறுகையில் நாட்டு படகு மூலம் தொழில் செய்து அன்றாடம் எங்கள் குடும்பத்தை நடத்தி வருகிறோம். கடந்த 10 நாட்களாக கட லுக்கு மீன்பிடிக்கச் சென்றுவிட்டு ஏமாற்றத்துடன் திரும்பி வருகிறோம். படகுக்கு செய்யும் செலவு, டீசல் செலவு தொகைக்கு கூட மீன்கள் கிடைப்ப தில்லை. இதனால் வாழ்வாதாரம் இன்றி பாதிக்கப்பட்டு வருகிறோம் என்றனர்.