தேர்ச்சி விகிதத்தில் குறைந்த நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி
நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி தேர்ச்சி விகிதத்தில் குறைந்துள்ளது.
நெல்லை அரசு மருத்துவ கல்லூரியில் 4ஆம் ஆண்டு படிக்கும் மருத்துவ மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் மாணவர்களின் தேர்ச்சி விகிதம் வெகுவாக குறைந்துள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக 55 சதவீதம் மாணவர்கள் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது.
மேலும் குறிப்பிட்ட ஒரு பாடப்பிரிவில் மட்டும் 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்ச்சி பெறாததும் தெரியவந்துள்ளது.
Next Story