குறைந்த வாக்குபதிவு: அதிகாரிகள் விழிப்புணர்வு

குறைந்த வாக்குபதிவு: அதிகாரிகள் விழிப்புணர்வு

அதிகாரி விழிப்புணர்வு

மதுரையில் மிக குறைந்த அளவு வாக்குப்பதிவான பகுதிகளில் ஒவ்வொரு வீடாக நேரடியாக சென்று விழிப்புணர்வு பண வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அலுவலர்கள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

மதுரை கிழக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதியில் கடந்தகால தேர்தல்களில் மிக குறைந்த அளவு வாக்குப்பதிவான கிராமங்களில் மாவட்ட தேர்தல் அலுவலர் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.மா.சௌ.சங்கீதா.இ.ஆ.ப.அவர்கள் உத்தரவின்படி, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையின் மூலம் ஒவ்வொரு வீடாக நேரடியாக சென்று வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தும் வகையில் வாக்காளர் விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கியும்,

வாக்காளர் விழிப்புணர்வு ஸ்டிக்கர் ஒட்டியும் விழிப்புணர்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மதுரை மாவட்டத்தில் நாடாளுமன்ற பொதுத்தேர்தல் 2024 வாக்குப்பதிவு வருகின்ற 19.04.2024.அன்று நடைபெறவுள்ளது.

இதனையொட்டி மாவட்டத்தில் அனைத்துப் பகுதிகளிலும் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் வாக்காளர் விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறிப்பாக, கடந்தகால தேர்தல்களின் போது குறைந்த அளவில் தேர்தல் வாக்குகள் பதிவான பகுதிகளில் வாக்குப்பதிவு சதவிகிதத்தை அதிகரித்திடும் நோக்கிலும், முதன்முறை வாக்காளர்கள் மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள், மூன்றாம் பாலினத்தவர் என அனைத்து தரப்பினரும் ஆர்வமுடன் தேர்தல் நடவடிக்கைகளில் பங்களிப்பு செய்திட ஊக்குவித்திடும் நோக்கில்,

இத்தகைய விழிப்புணர்வு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. குறிப்பாக, கடந்தகால தேர்தல்களில் தமிழ்நாடு மாநிலத்தில் சராசரியாக 735 சதவிகிதம். வாக்குகள் பதிவாகியுள்ளன. அதன்படி, மதுரை மாவட்டத்தில் மாநில சராசரி வாக்குப்பதிவு சதவிகிதத்திற்கும் குறைவாக வாக்குகள் பதிவான வாக்குச்சாவடிகளை குறைந்த வாக்குகள் பதிவான வாக்குச்சாவடியாக கணக்கிட்டு அப்பகுதிகளில் வாக்குப்பதிவு சதவிகிதத்தை அதிகரித்திடும் நோக்கில் கூடுதல் கவனம் செலுத்தி பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மதுரை கிழக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்டு 325 வாக்குச்சாவடி மையங்கள் உள்ளன. கடந்தகால தேர்தல்களில் நாகங்குளம் எஸ்.ஆலங்குளம். ஆனையூர், கண்ணனேந்தல், கோசக்குளம் போன்ற கிராமங்களில் 50 சதவிகிதத்திற்கும் குறைவாக வாக்குகளே பதிவாகியது கண்டறியப்பட்டுள்ளது.

எனவே இப்பகுதிகளில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையின் மூலம் ஒவ்வொரு வீடாக நேரடியாக சென்று வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தும் வகையில் வாக்காளர் விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கியும், வாக்காளர் விழிப்புணர்வு ஸ்டிக்கர் ஒட்டியும் விழிப்புணர்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Tags

Next Story