இலொயோலா கல்லூரி - மெட்டாலா மகளிர் தினவிழா அறிக்கை (2024)




இலொயோலா கல்லூரி
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் மெட்டாலாவில் உள்ள இலொயோலா கல்லூரியில் 08.03.2024 வெள்ளிக்கிழமை அன்று மகளிர் தினத்தை முன்னிட்டு மகளிர் தினவிழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வில் கோவையைச் சார்ந்த மிகச்சிறந்த ஆளுமைமிக்க பெண் தொழிலதிபரும், கூடைப்பந்தாட்ட வீரருமாகிய திருமதி. தீபிகா அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு பெண்ணினத்தின் பெருமைகள் பற்றியும் பெண்கள் அடைந்திருக்கும் உயர் சாதனைகள் குறித்தும் எடுத்துரைத்தார்.
இந்நிகழ்வில் கல்லூரியின் அதிபர் அருள் தந்தை முனைவர் அல்போன்ஸ் மாணிக்கம் சே.ச. அவர்கள், கல்லூரியின் செயலர் தந்தை அருள்திரு முனைவர் ஆல்பர்ட் வில்லியம் சே.ச. அவர்கள், கல்லூரியின் முதல்வர் தந்தை அருள்திரு முனைவர் சாமுவேல் ஜெயசீலன்.சே.ச. அவர்கள், கல்லூரியின் துணை முதல்வர் அருள் தந்தை மரிய வெனீஸ் சே.ச. அவர்கள், கல்லூரியின் விடுதி இயக்குநர் அருள் தந்தை பொன் ரூபன் சே.ச. அவர்கள், கல்லூரியின் துணை முதல்வர் முனைவர் ராகே சர்மா அவர்கள் ஆகியோர் கலந்துகொண்டு பேராசிரியர்கள். மாணவிகள், அலுவலகப் பணியாளர்கள் உள்ளிட்ட அனைத்து மகளிருக்கும் வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக்கொண்டனர்.
பெண்மையைப் போற்றும் வகையில் அமைந்த இந்நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் கல்லூரியின் புல முதன்மையர் பேரா. கேத்தரின் பிரதிபா, பேராசிரியர்களுடனும், மாணவ- மாணவிகளுடனும் இணைந்து செய்தனர்.




