சந்திர கிரகணம் - நாமக்கல் ஆஞ்சநேயர் கோவில் நடை அடைப்பு

சந்திர கிரகணத்தை முன்னிட்டு நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் இன்று மாலை நடை சாத்தப்படுகிறது.
நாமக்கல் புகழ்பெற்ற ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இங்கு ஒரே கல்லினால் ஆன சுமார் 18 அடி உயரம் கொண்ட ஆஞ்சநேயர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இங்கு மற்ற கோவில்களை போல கோபுரம் இல்லாமல் ஆஞ்சநேயர் விஸ்வரூபமாக இருப்பது தனி சிறப்பு. இங்கு நாமக்கல் மட்டுமின்றி வெளி மாவட்டங்களில் இருந்தும் வெளி மாநிலங்களில் இருந்தும் தினசரி ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்வது வழக்கம். இந்நிலையில் இன்று சந்திரகிரகணம் அதிகாலை 01:05 மணிக்குத் தொடங்கி 02:24 மணி வரை நிகழ உள்ளது. அதனை முன்னிட்டு தமிழகம் முழுவதும் கோவில்களில் வழக்கத்துக்கு மாறாக முன்கூட்டியே நடை சாத்தப்படுகிறது. அதன்படி புகழ்பெற்ற நாமக்கல் ஆஞ்சநேயர் கோவில், நரசிம்மர் கோவில்களில் சந்திர கிரகணத்தை முன்னிட்டு மாலை 6.30 மணிக்கு பூஜைகள் அனைத்து முடித்து நடை சாத்தப்படுகிறது. அதன்பின் அடுத்த நாள் காலை 7 மணிக்கு கோவில்கள் சுத்தம் செய்யப்பட்டு பூஜைகள் செய்யப்பட்ட பிறகே பக்தர்களின் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர் என கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story