சோழவந்தான் பள்ளி ஆண்டு விழாவில் மதன் கார்கி பங்கேற்பு

சோழவந்தான் பள்ளி ஆண்டு விழாவில்  மதன் கார்கி பங்கேற்பு

சோழவந்தான் பள்ளி ஆண்டு விழாவில் திரைப்பட பாடல் ஆசிரியர் மதன் கார்கி பங்கேற்றார்.


சோழவந்தான் பள்ளி ஆண்டு விழாவில் திரைப்பட பாடல் ஆசிரியர் மதன் கார்கி பங்கேற்றார்.

மதுரை மாவட்டம் சோழவந்தான் கல்வி சர்வதேச பொது பள்ளியின் ஆண்டு விழா நடைபெற்றது. இந்த விழாவிற்கு கல்வி குழும பள்ளிகளின் தலைவர் செந்தில்குமார், கல்வி குழும் பள்ளிகளின் தாளாளர் குமரேஷ், கல்வி குழும பள்ளிகளின் இயக்குனர் செந்தில் ராஜ்குமார் முன்னிலை வகித்தனர். இவ்விழாவில் பிரபல திரைப்பட பாடல் ஆசிரியரும் எழுத்தாளருமான மதன் கார்கி சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.

அமெரிக்கன் பள்ளியின் நிறுவனர் மோகனலட்சுமி கவுரவ விருந்தினராக கலந்து கொண்டு சிறப்பித்தார். இந்த விழாவில் 2023 2024 ஆண்டிற்கான கல்வி விருதுகள் வழங்கப் பட்டது. மேலும் பள்ளியின் சிறப்பு சுவர் திறந்து வைக்கப்பட்டது. தொடர்ந்து மாணவ மாணவிகளின் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடை பெற்றது. விழாவில் ஆசிரியர்கள் மாணவ மாணவிகள், மற்றும் பெற்றோர்கள் ஏராள மானோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story