மதனகிரி முனேஸ்வர சுவாமி கோவில் கும்பாபிேஷகம்
தேன்கனி கோட்டை அருகே பழமை வாய்ந்த மதனகிரி முனேஸ்வர சுவாமி கோவில் கும்பாபிேஷகம் தேன்கனிக்கோட்டை தாலுகாவிற்கு உட்பட்ட தண்டரை அருகே சாமிபுரம் கிராமத்தில் மலை மீது பழமை வாய்ந்த மதனகிரி முனேஸ்வரா சுவாமி கோவில் உள்ளது. இக்கோவில் புனரமைப்பு செய்யப்பட்டு கும்பாபிேஷக விழா கடந்த 25 ஆம் தேதி துவங்கியது. கணபதி பூஜை, வாஸ்து ஹோமம் மற்றும் சாந்தி ஹோமம், கலசஸ்தாபனம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தன.
இந்த நிலையில் இன்று கோபுர கலசங்களுக்கு பல்வேறு புன்னிய நதிகளில் இருந்து வந்த புனித நீரை ஊற்றி மகா கும்பாபிேஷகம் நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோயிலுக்கு வந்து சுவாமிகளை தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம், நீர்மோர் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை கோவில் கமிட்டி உறுப்பினர்கள் செய்திருந்தனர். இன்ஸ்பெக்டர் தவமணி தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.