மாடத்தட்டுவிளை புனித செபஸ்தியார் ஆலய திருவிழா
மாடத்தட்டுளை புனித செபஸ்தியார் ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.
கன்னியாகுமரி மாவட்டம் மாடத்தட்டுவிளை புனித செபஸ்தியார் ஆலய திருவிழா நேற்று தொடங்கியது. பத்து நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் நேற்று மாலையில் திருப்பலி நடந்தது. தொடர்ந்து இரவில் புதுச்சேரி மறை மாவட்ட பேராயர் பிரான்சிஸ் கலிஸ்ட் தலைமையில் கொடியேற்றப்பட்டது. இதில் திரளானோர் கலந்து கொண்டனர். முன்னதாக காலை மாடத்தட்டு விளை பங்கில் பணியாற்றி நினைவில் வாழும் அருட்பணியாளர்கள், அருட்சகோதரிகள் மற்றும் பங்கிற்கு நிலம் தானம் கொடுத்தவர்களுக்கு நினைவு திருப்பலி நடந்தது. இந்த விழா நாட்களில் தினமும் காலை 6 மணிக்கு திருப்பலி, மாலை 6 மணிக்கு ஜெபமாலை, மாலையில் திருப்பலி இரவு 8 மணிக்கு பொதுக்கூட்டம், கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.
Next Story