மாடத்தட்டுவிளை புனித செபஸ்தியார் ஆலயவிழா இன்று தொடக்கம்

குமரி மாவட்டம் வில்லுக்குறி அருகே உள்ள மாடத்தட்டுவிளை புனித செபஸ்தியார் ஆலயப் பெருவிழா இன்று தொடங்குகிறது. மாலை 6 மணிக்கு பாண்டிச்சேரி உயர் மறைமாவட்ட பேராயர் மேதகு பிரான்சிஸ் கலிஸ்ட் தலைமையேற்று மறையுரை வழங்கும் ஜெபமாலை, புகழ்மாலை, திருக்கொடியேற்றம், திருப்பலி ஆகியவை நடைபெறுகிறது. விழா நாட்களில் தினமும் காலை 6 மணிக்கு திருப்பலி, மாலை 6 மணிக்கு ஜெபமாலை, புகழ்மாலை, திருப்பலி, இரவு 8.30 மணிக்கு பொதுக்கூட்டம், கலைநிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.
சிறப்பு நிகழ்ச்சிகளாக 9-ம் நாள் இரவு திருத்தேர்பவனி, சிறப்பு தவில், வாணவேடிக்கையும் நடக்கிறது. 10-ம் நாள் 21ம் தேதி காலை 5.30 மணிக்கு கோட்டாறு மறைமாவட்ட குருகுல முதல்வர் அருட்பணி ஜாண்ரூபஸ் தலைமையில், ஆடம்பர கூட்டுத்திருப்பலி, காலை 8.30 மணிக்கு மதுரை சூவன்ஸ்டாட் தமிழ்நாடு மாநில தலைவர் அருட்பணி புஷ்பராஜ் தலைமை ஏற்று, அருட்பணி பீட்டர் ஜெயகுமார் கஸ்பர் மறையுரை வழங்கும் திருவிழா திருப்பலி, பகல் 2 மணிக்கு திருத்தேர்பவனி, இரவு 8 மணிக்கு திருக்குடும்ப திருஇயக்கம் வழிநடத்தும் மாடத்தட்டுவிளை பங்கில் கண்தானம் செய்தவர்களின் குடும்பத்தினருக்கு பாராட்டு வழங்கும் நிகழ்ச்சி ஆகியவை நடைபெறுகிறது.
