மடாவளம் காமாட்சி அம்மன் சிறப்பு அலங்காரம்
சிறப்பு அலங்காரம்
திருவண்ணாமலை மாவட்டம், மடாவளம் கோவிலில் மண்டல பூஜையை முன்னிட்டு காமாட்சி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகே அனக்காவூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட உக்கல் கிராமத்தில் புதிதாக கட்டப்பட்ட மடாவளம் அருள்மிகு ஸ்ரீ காமாட்சி அம்மன் 48 நாள் மண்டல அபிஷேகம் நடைபெற்று வருகிறது. இதில் காமாட்சி அம்மன் தங்க கவசத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இந்நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Next Story