ஈரோடு மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் மதி சிறுதானிய உணவகம்
ஈரோடு மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் தமிழக மதுவிலக்கு, ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் சு.முத்துசாமி மகளிர் திட்டம் சார்பில் மதி சிறு தானிய உணவகத்தினை திறந்து வைத்தார்
சர்வதேச சிறுதானிய ஆண்டு கொண்டாடப்படுவதால், தமிழ்நாடு அரசு அனைத்து மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் தகுதியான மகளிர் சுய உதவிக்குழு கூட்டமைப்பினை கொண்டு ரூ.5.00 இலட்சம்மதிப்பீட்டில் சிறுதானிய உணவகம் அமைத்திட தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து ஈரோடு மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் தமிழக மதுவிலக்கு, ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் சு.முத்துசாமி மகளிர் திட்டம் சார்பில் மதி சிறு தானிய உணவகத்தினை திறந்து வைத்தார்.
இந்த சிறுதானிய உணவகத்தில் மகளிர் சுய உதவிக்குழுக்கள் மூலம் தயாரிக்கப்பட்ட சிறுதானிய உணவுப்பொருட்கள், சிறுதானிய திண்பண்டங்கள் போன்ற சிறப்பான பொருட்கள், நியாயமான விலையில் விற்பனை செய்யப்படுகிறது. எனவே, பொதுமக்கள் இந்த சிறுதானிய உணவகத்தில் தரமான பொருட்களை, நியாயமான விலையில் வாங்கி சுய உதவிக்குழுக்களை ஊக்குவித்து, பெண்களின் வாழ்வாதாரத்தை உயர்த்திட வேண்டுமென கேட்டுக்கொண்டார் தொடர்ந்து ஈரோடு, மொடக்குறிச்சி, பெருந்துறை வட்டங்களைச் சேர்ந்த 10 மகளிர் சுய உதவிக்குழுவினர்களுக்கு ரூ.8.25 இலட்சம் மதிப்பீட்டில் சமுதாய முதலீட்டு நிதி மற்றும் தொழில்முனைவோர் நிதிகளை வழங்கினார்.