மதுரை அருகே குடும்பத்தகராறில் அண்ணனை கத்தியால் குத்திய இளைஞர் கைது

அண்ணனை கத்தியால் குத்திய இளைஞர் கைது
மதுரை அருகே குடும்பத்தகராறில் அண்ணனை கத்தியால் குத்திய இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மதுரை மாவட்டம் ஜெய்ஹிந்த்புரத்தைச் சேர்ந்தவர் மாரிசெல்வம் (42). இவர், மாட்டுத்தாவணி காய்கறி மார்க்கெட்டில் கடை நடத்தி வருகிறார். இவரது வீட்டில் நடைபெற்ற ஒரு சுபநிகழ்ச்சிக்காக நேற்று முன்தினம், பாண்டிகோவில் எதிரே உள்ள தனியார் மகாலில், கிடாய் வெட்டி உறவினர்களுக்கு விருந்து வழங்கும் நிகழ்ச்சி நடத்தியுள்ளார். ஆனால் இந்த விசேஷத்திற்கு அவரது அக்காவை அழைக்கவில்லை என தெரிகிறது.
இதனால் ஆத்திரம் அடைந்த அவரது தம்பி காளிதாஸ் (37) தங்களை ஏன் அழைக்கவில்லை என கூறி மாரிச்செல்வத்துடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அதுமுற்றிய நிலையில் ஆத்திரமடைந்த காளிதாஸ், அருகில் இருந்து கத்தியை எடுத்து மாரிச்செல்வத்தை குத்தியுள்ளார். இதில் காயமடைந்த அவர் மதுரை அரசு மருத்துவமரனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்த சம்பவம் குறித்து, மாட்டுத்தாவணி காவல் நிலையத்தில், மாரிச்செல்வத்தின் மனைவி கோகிலா புகார் அளித்தார். அதுதொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் காளிதாஸை கைது செய்தனர்.
