மூளையில் ஆபரேசன் செய்த மதுரை அப்போலோ மருத்துவமனை மருத்துவர்கள்

மூளையில் ஆபரேசன் செய்த மதுரை அப்போலோ மருத்துவமனை மருத்துவர்கள்

மூளையில் ஆபரேசன் செய்த மதுரை அப்போலோ மருத்துவமனை மருத்துவர்கள் 

மதுரையில் சிறுமிக்கு மூளையில் ஆபரேசன் செய்த மதுரை அப்போலோ மருத்துவமனை மருத்துவர்கள் - குணமடைந்த வலிப்பு நோய்
வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டு தினசரியும் கீழே விழுந்து அடிபட்ட சிறுமியின் மூளையில் சவாலான முறையில் ஆபரேசன் செய்து பிழைக்க வைத்துள்ளனர். மதுரை மருத்துவர்கள். சிறுமிக்கு செய்த அறுவை சிகிச்சை குறித்தும் வலிப்பு நோய் குணமானது எப்படி என்றும் தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் விளக்கம் அளித்துள்ளனர். திரைப்படங்களில் வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டவர்களை காட்டும் போது கை கால்கள் வெட்டி இழுக்கும். முகம் கோணலாகும். மூளை நரம்புகளில் இருந்து புறப்படும் மின்சாரமானது சரியாக வேலை செய்யாமல், தவறாக செயல்படும் போது ஏற்படும் பாதிப்பே வலிப்பு நோய். வலிப்பு நோயை கிராமப்பகுதிகளில் காக்கா வலிப்பு என்பார்கள். கை கால் இழுத்துக்கொண்டு, வாயில் நுரை தள்ளி, சுயநினைவை இழந்துவிடுவார்கள். இதுதான் பொதுவாக வரக்கூடிய வலிப்பு நோய். மதுரையில் 8 வயது சிறுமிக்கு வலிப்பு நோய் பாதிப்பு பாடாய் படுத்தியது. தினசரியும் வலிப்பு நோயால் அவதிப்பட்டு வந்த சிறுமிக்கு அறுவை சிகிச்சை செய்து நிரந்தரமான தீர்வு கண்டுள்ளனர். அது குறித்து அந்த மருத்துவமனை மருத்துவர்கள் விளக்கம் அளித்துள்ளனர். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மதுரை அப்பல்லோ மருத்துவமனை மூளை நரம்பியல் நிபுணர்கள் மீனாட்சி சுந்தரம், ஷ்யாம், மூளையில் இருந்து தேவையற்ற நேரத்தில் கை, கால்களுக்கு மின்சாரம் செல்வதை வலிப்பாக அறிகிறோம். மூளையில் கட்டி, கிருமி, அடிபடுதல் போன்றவற்றால் வலிப்பு வரலாம். பாதிப்பில் உள்ளோரில் 70 சதவீதத்தினர் தினமும் ஒரு மாத்திரை 25 சதவீதம் பேர் 2 அல்லது 3 மாத்திரைகள் எடுப்பவராக இருக்கலாம். அதற்கு மேல் தேவைப்பட்டால் ஆபரேஷன் தேவை. மதுரை அருகே ஒரு கிராமத்தைச் சேர்ந்த 8 வயது சிறுமி வலிப்பு நோயால் தினமும் 10 முதல் 15 முறைகூட கீழே விழுந்து அடிபடுவார். இதனால் அச்சிறுமியின் எல்லா செயல்பாடுகளும் பாதித்தன. அப்போலோ மருத்துவமனைக்கு வந்த அவரை பரிசோதனை செய்ததில் அறுவை சிகிச்சை தேவைப்பட்டது. சிறுமியின் மூளையின் இடது பகுதியில் இருந்து வலது பகுதிக்கு தேவையற்ற வகையில் மின்சாரம் பாய்ந்ததால் பாதிப்பு இருந்தது. அவரது மூளையை 2 ஆக பிரிக்க முடிவு செய்தோம். அவருக்கு மயக்கமருந்து கொடுப்பது, அறுவைசிகிச்சைக்குப் பின் கை, கால் செயலிழப்பு, பேச்சு இழப்பு ஏற்படும் என்ற சவால்கள் இருந்தன. அவருக்கு 'கார்லஸ் கலாஸ்டோமி' என்ற 6 மணி நேர ஆப்பரேஷன் வெற்றிகரமாக நடந்தது. அதன்பின் 3 மாதங்களாக அவருக்கு வலிப்பு உட்பட எந்த பாதிப்பும் இல்லை. வலிப்பு வரும் கால இடைவெளி, மாத்திரை அளவை குறைப்பதுகூட சிறப்பான சிகிச்சையே. இச்சிறுமிக்கு மீண்டும் வலிப்பு வரவில்லை என்பதால் குணமடைந்ததாக கொள்ளலாம். வலிப்பு நோய் குறித்த விழிப்புணர்வு அனைவருக்கும் தேவை என்றும் டாக்டர்கள் தெரிவித்தனர்.

Tags

Next Story