மீனாட்சி அம்மன் கோயில் பகுதியில் பாஜக வேட்பாளர் பிரச்சாரம்

மீனாட்சி அம்மன் கோயில் பகுதியில் பாஜக வேட்பாளர் பிரச்சாரம்

ராம ஸ்ரீனிவாசன் பிரச்சாரம்

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் பகுதியில் பாஜக வேட்பாளர் ராம ஸ்ரீனிவாசன் பிரச்சாரம் மேற்கொண்டார்.

மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு வருகிற ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறும் என இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவுறுத்தப்பட்டு தமிழக முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. மதுரையில் பாஜக சார்பாக பாஜக நாடாளுமன்ற வேட்பாளராக பேராசிரியர் ராம சீனிவாசன் போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து அதிமுக சார்பாக மருத்துவர் சரவணன், திமுக சிபிஐஎம் கூட்டணியில் எழுத்தாளர் சு வெங்கடேசன் போட்டியிடுகின்றனர்.

இந்த நிலையில் பாஜக மதுரை வேட்பாளர் ராம சீனிவாசன் தன்னுடைய தேர்தல் பிரச்சாரத்தை நேற்று தொடங்கியுள்ளார் குறிப்பாக மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நேற்று மாலை சாமி தரிசனம் செய்த அவர் மீனாட்சி அம்மன் கோவிலை சுற்றியுள்ள அனைத்து மாசி வீதிகளிலும் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார் இந்த நிகழ்வில் 300-க்கும் மேற்பட்ட பாஜகவினர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story