மதுரை- போடிநாயக்கனூர் சோதனை ரயில் ஓட்டம்
மதுரையில் இருந்து போடிநாயக்கனூர் வரை நாளை 121 கிலோ மீட்டர் வேகத்தில் சோதனை ரயில் ஓட்டம் இயக்கப்படுகிறது.
மதுரையில் இருந்து போடிநாயக்கனூர் வரை நாளை 121 கிலோ மீட்டர் வேகத்தில் சோதனை ரயில் ஓட்டம் இயக்கப்படுகிறது.
மதுரையில் இருந்து போடிநாயக்கனூர் வரை நாளை 121 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கப்படும் சோதனை ரயில் ஓட்டம் தற்போது மதுரையில் இருந்து போடிநாயக்கனூர் வரை எக்ஸ்பிரஸ் ரயில் 100 கிலோ மீட்டர் வேகம் வரை இயக்கப்படும் நிலையில் 121 கிலோமீட்டர் வேகத்தில் சோதனை ஓட்ட ரயில் இயக்கப்பட்டு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட உள்ளது. தண்டவாளங்களில் ஏற்படும் அதிர்வுகள் மற்றும் அழுத்தங்களை கண்டறியும் வகையில் தானியங்கி உபகரணங்களுடன் செயல்படும் அலைவு கண்காணிப்பு அமைப்பு (OMS) சோதனை ஓட்ட ரயில் மூலம் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட உள்ளது. நாளை 16.06.24 மதுரையில் இருந்து போடிநாயக்கனூர் வரை 121 கிலோமீட்டர் வேகத்தில் இயக்கப்படுவதால் பொதுமக்கள் வாகன ஓட்டிகள் ரயில்வே இருப்புப் பாதைகளை கடப்பதில் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என்று ரயில்வே நிர்வாகம் எச்சரித்து உள்ளது.
Next Story