தமிழக மக்களை கொச்சைப்படுத்திய மத்திய இணை அமைச்சர் - அதிரடி காட்டிய மதுரை சைபர் கிரைம் போலீஸ்

தமிழக மக்களை கொச்சைப்படுத்திய மத்திய இணை அமைச்சர் - அதிரடி காட்டிய மதுரை சைபர் கிரைம் போலீஸ்

கர்நாடக இணை அமைச்சர் மீது வழக்குப்பதிவு 

பெங்களூர் குண்டுவெடிப்பு சம்பவத்தில் இரு தரப்பினரிடையே மோதலை தூண்டும் வகையில் பேசிய மத்திய இணை அமைச்சர் மீது 4 பிரிவுகளில் வழக்கு

பெங்களூர் குண்டுவெடிப்பு சம்பவத்தில் இரு தரப்பினரிடையே மோதலை தூண்டும் வகையில் பேசியதாக மத்திய இணை அமைச்சர் மீது மதுரை சைபர் கிரைம் போலீசார் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

கர்நாடகா மாநிலம் மத்திய பெங்களூரு நகரத்தப்பேட்டையில் மத்திய இணை அமைச்சர் ஷோபா கரந்தலாஜே செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, கடந்த ஒன்றாம் தேதி பெங்களூரில் நடந்த ராமேஸ்வரம் கபே குண்டு வெடிப்பு சம்பவத்தில் தமிழகத்தை சேர்ந்தவர்களால் வைக்கப்பட்டது எனவும், தமிழகத்தில் இருந்து மக்கள் பயிற்சி பெற்று இங்கு வெடிகுண்டுகளை வைக்கிறார்கள் என்றும் பேசியது சர்ச்சையானது.

இதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனங்களை தெரிவித்த நிலையில், மதுரையை சேர்ந்த தியாகராஜன் என்பவரி சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். அதில், ”மத்திய இணை அமைச்சர் ஷோபாவின் பேச்சு கர்நாடக மக்களுக்கும், தமிழக மக்களுக்கும் இடையே பகை மற்றும் வெறுப்புணர்வுகளை வளர்க்க முயற்சிக்கின்றது. தமிழ்நாட்டு மக்களை தீவிரவாதிகள் என்று பொதுமைப்படுத்தி தமிழர்கள் மற்றும் கன்னடம் பேசும் மக்கள் என இரு சமூகத்தினரிடையே உருவாக்க முயல்கிறது. அறிக்கையில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் வெறுப்புணர்வை தமிழ் சமூகத்திற்கு எதிராக வன்முறையை தூண்டும் சாத்தியம் உள்ளது” என புகார் கொடுத்தார்.

அதன்படி, மத்திய இணைஅமைச்சர் ஷோபா கரந்தலாஜே மீது 153, 153(A), 505(1)(b), 505(2) உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தேர்தல் தொடங்கிய நிலையில் இரு தரப்பு மோதலை தூண்டும் வகையில் பேசினால் நடவடிக்கை ஏடுக்கப்படும் என தேர்தல் ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளதால், மத்திய இணை அமைச்சரின் சர்ச்சை கருத்துக்கு மதுரையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story