மதுரை அரசு நகர பஸ்ஸின் அவல நிலை
பேருந்துக்குள் மழை
மதுரை மாவட்டம், சோழவந்தான் அரசு பணிமனையில் இருந்து இயக்கப்படும் அரசு நகரப் பேருந்துகள் பெரும்பாலும் மழைக்காலங்களில் பேருந்து உள்ளே அருவி போல மழைநீரானது கொட்டுகிறது. இதனால், பயணிகள் கடும் அவதிக்கு உள்ளாகின்றனர். மதுரையிலிருந்து இயக்கப்படும் அரசு பேருந்துகளுக்கும் இதே நிலைதான். மதுரை மாவட்டத்தில், சோழவந்தான், செக்கானூரணி, மேலூர், திருமங்கலம், மதுரை புதூர், எல்லீஸ் நகர், ஆகிய பணிமனையில் இருந்து அரசு நகரப் பேரூந்துகள் இயக்கப் படுகிறது.
இவ்வாறு இயக்கப்படும், பஸ்களில் நகரப் பேருந்துகளில் மழைக் காலங்களில் பயணிகள் அமருகின்ற இருக்கை மீது குற்றால அருவி போல மழைநீர் கொட்டுகிறது. இதனால், பஸ்களில் பயணிகள், குடையைப் பிடித்துக் கொண்டு அமரும் நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து, அரசு போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனர், பொதுமேலாளர், கோட்ட மேலாளர், கிளை மேலாளர் ஆகியோர்களுக்கு பயணிகள் சார்பில், புகார்கள் தெரிவித்தும், அரசு பஸ்சில் தொடர்கின்ற அவலத்தை தீர்க்க முன் வரவில்லை என, பயணிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
சோழவந்தான் அரசு போக்குவரத்து பணிமனயிலிருந்து, மதுரையிலிருந்து, கருப்பட்டி, குருவித்துறை, நாச்சிகுளம் போன்ற ஊர்களுக்கு இயக்கப்படும் அரசு நகர பஸ்களில், மழை நேரங்களில் அருவி போல இருக்கைகள் மேல் கொட்டுகிறது. இதனால், பயணிகள் இருக்கைகளில் அமர்ந்து பயணம் செய்ய முடியாமல், கடும் அவதிக்கு உள்ளாகின்றனர். இப்ப பிரச்சினையை தீர்க்க, சம்பந்தப்பட்ட மதுரை மாவட்ட போக்கு வரத்து அதிகாரிகள் முன்வர வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.