பத்தாம் வகுப்பு பொது தேர்வில் பின்தங்கிய மதுரை மாவட்டம்

பத்தாம் வகுப்பு பொது தேர்வில் பின்தங்கிய மதுரை மாவட்டம்

பத்தாம் வகுப்பு பொது தேர்வு முடிவில் மதுரை மாவட்டம் பின்தங்கி உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.


பத்தாம் வகுப்பு பொது தேர்வு முடிவில் மதுரை மாவட்டம் பின்தங்கி உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் பயின்ற 10-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள், கடந்த மார்ச் மாதம் 26-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 8- ஆம் தேதி வரை நடைபெற்றது. இதில் 12,616 பள்ளிகளைச் சேர்ந்த 4 லட்சத்து 57 ஆயிரத்து 525 மாணவர்கள், 4 லட்சத்து 52 ஆயிரத்து 498 மாணவிகள் மற்றும் மூன்றாம் பாலினத்தவர் ஒருவர் என, மொத்தம் 9 லட்சத்து 10 ஆயிரத்து 24 பேர் தேர்வு எழுதினர். அதோடு, 28 ஆயிரத்து 827 தனித்தேர்வர்கள், 235 சிறைவாசிகள் பொதுத்தேர்வை எழுதினர். இந்த தேர்வானது, 4 ஆயிரத்து 107 மையங்களில் நடைபெற்றது. இதையடுத்து விடைத்தாள்களை திருத்தும் பணிகள் அனைத்தும் நிறைவடைந்த நிலையில், இன்று காலை 9.30 மணியளவில் சென்னை டி.பி.ஐ வளாகத்தில் இருக்கும் அரசு தேர்வுகள் மையத்தில் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. தேர்வுத்துறை வெளியிட்ட அறிவிப்பின்படி, தேர்வு எழுதிய 9 லட்சத்து 10 ஆயிரத்து 24 பேர் தேர்வு எழுதிய மாணவர்களில் 91.55 சதவிகிதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு 10-ம் வகுப்புபொதுத்தேர்வில் 91.39% மாணாக்கர்கள் தேர்ச்சி பெற்று இருந்த நிலையில், நடப்பாண்டில் 91.55 சதவிகிதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

கடந்த ஆண்டை காட்டிலும் 0.16 % கூடுதலாக தேர்ச்சி பெற்றுள்ளனர். விடைத்தாள் திருத்தும் பணிகள் 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு விடைத்தாள்கள் ஏப்ரல் 12 முதல் 22-ஆம் தேதி வரை திருத்தப்பட்டன. இதற்காக தமிழகம் முழுவதும் 88 முகாம்கள் அமைக்கப்பட்டன. விடைத்தாள் திருத்தும் பணியில் சுமார் 50 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். விடைத்தாள் திருத்தும்போது தமிழ் வழி விடைத் தாள்களை தமிழ் வழி ஆசிரியர்களும், ஆங்கில வழி விடைத் தாள்களை ஆங்கில வழி ஆசிரியர்கள் மட்டுமே திருத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது. 12 -ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள். முன்னதாக கடந்த திங்களன்று 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகின. அதில், 92.37% (3.93 லட்சம்) மாணவர்கள், 96.44% (3.25 லட்சம்) மாணவிகள் என தேர்வு எழுதியவர்களில் மொத்தம் 94.56% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 7532 பள்ளிகளில் பயின்ற மாணவர்கள் தேர்வெழுதிய நிலையில், அதில் 100% தேர்ச்சி அடைந்த பள்ளிகளாக 2400 பள்ளிகள் இருக்கின்றன. 26352 மாணவர்கள் 100 க்கு 100 மதிப்பெண் பெற்றுள்ளனர். 125 சிறைவாசிகள் தேர்வெழுதியத்தில் 112 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். அதேநேரம், பள்ளிக் கல்வித் துறை தெரிவித்துள்ளபடி, 51,919 மாணவர்கள் தேர்ச்சி பெறவில்லை. அதில் 32,164 ஆண்களும் 19,755 பெண்களும் உள்ளனர். மதுரை மாவட்டம் மதுரை மாவட்டத்தில், 91.79% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்வு எழுதிய 38,063 பேரில், 19,190 ஆண் மாணவர்களும், 18,873 பெண் மாணவர்களும் தேர்ச்சிப் பெற்றுள்ளனர். இதில் ஆண்கள் 88.49%, பெண்கள் 95.15% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் மதுரை மாநகர் பகுதியில் உள்ள மாநகராட்சி 15 பள்ளிகளில் 91.78% தேர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே எழுமலை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பயின்ற சுஸ்யா என்ற மாணவி 500 க்கு 497 மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளார். பின் தங்கும் மதுரை பிளஸ் டூவிலும், 10 ஆம் வகுப்பிலும் தேர்வு முடிவுகளின் விகிதத்தில் மதுரை மாவட்டம் தொடர்ந்து பின் தங்கி வருவதாக சமூகஆர்வலர்கள் குற்றச்சாட்டு எழுப்பியுள்ளனர். மாவட்ட நிர்வாகம் பள்ளி கல்வித்துறையில் போதிய கவனம் செலுத்த வேண்டும் என கேட்டுக் கொண்டனர்.

Tags

Next Story