மதுரை காமராஜர் பல்கலைக்கழக ஊழியர்கள் வேலை நிறுத்தம்
செய்தியாளர் சந்திப்பு
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் ஊதியம் வழங்காததை கண்டித்து ஊழியர் சங்கத்தினர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மதுரை நாகமலை புதுக்கோட்டையில் உள்ள மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் நிர்வாக அலுவலர் சங்கம் மற்றும் ஓய்வூதிய சங்கம் சங்கம் ஆகியவை இணைந்து நேற்று வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் நிரந்தர ஊழியர் சங்கம் மற்றும் எஸ்சி எஸ்டி பிரிவு ஊழியர் சங்கம் தொகுப்பு ஊதிய பணியாளர்கள் உள்ளிட்ட அனைவரும் இணைந்து சம்பளம் வழங்க கோரி பல்கலைக்கழக வளாகத்தில் காலை 10:30 மணி முதல் மாலை 5.30 மணி வரை வேலை நிறுத்தம் போராட்டம் நடத்தினர். இதில் பெண்கள் உட்பட 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். தமிழகத்தில் மிகச் சிறந்த பல்கலைக்கழகங்கள் ஒன்றான மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் தற்போது நிதி நிலைமையில் தள்ளாடி வருகிறது பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கான சம்பளம் வழங்க முடியாமல் பல்வேறு போராட்டங்களை சந்தித்து வருகிறது. மேலும் இந்த போராட்டத்தினால் பல்கலைக்கழகத்தில் பல்வேறு பணிகள் நடைபெறாமல் இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் தங்களது கோரிக்கைகள் நிறைவேறும் வரை இந்த வேலை நிறுத்த போராட்டம் தொடரும் என்றும் போராட்டக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
Next Story