மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்!

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் ஊழியர்கள், அலுவலர்கள், ஓய்வூதியர்கள் சங்கம் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் சம்பளம் மற்றும் ஓய்வூதியங்கள் போன்ற பலன்களை வழங்க கோரி ஊழியர்கள் அலுவலர்கள் ஆசிரியர்கள் சங்கம் சார்பாக இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் ஊழியர்கள் அலுவலர்கள் ஆசிரியர்கள் முன்னாள் ஆசிரியர்களுக்கு சம்பளம் மற்றும் ஓய்வூதியம் வழங்காததை கண்டித்து துணைவேந்தர் குமார் அலுவலகம் முன்பு ஆசிரியர்கள் நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பாகவும் ஓய்வூதியர்கள் சங்கம் சார்பாகவும் ஊழியர் சங்கம் சார்பாகவும் 200க்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் முனைவர் சா.முத்தையா கூறும்போது: தற்போதுள்ள துணை வேந்தர் தற்போதுள்ள அரசியல் கட்சி தலைவருடன் இணைந்து செயல்படுவதில்லை இதில் ஏதேனும் அரசியல் உள்நோக்கம் இருக்கிறதா என்று தெரியவில்லை அவருடைய பொறுப்பை தட்டிக் கழிக்கின்றார். உடனடியாக துணைவேந்தர் அரசுடன் கலந்து கொண்டு எங்களுக்கான பலன்களை பெற்றுத் தர வேண்டும் எங்கள் சார்பாக உயர் கல்வித் துறை அமைச்சர் நிதி அமைச்சர் அனைத்து செயலாளர்களை நேரில் சந்தித்து மனு அளித்துள்ளோம்.
ஆனால் எங்கள் தரவுகளை உறுதிப்படுத்தும் பொறுப்பு துணைவேந்தரிடம் உள்ளது. இனியும் துணைவேந்தர் பொறுப்பேற்கவில்லை என்றால் எங்கள் போராட்டத்தை தீவிர படுத்தவும். நாங்கள் ஊழியர்களும் ஆசிரியர்களும் அறவழிப் போராட்டத்தை ஆரம்பித்திருக்கிறோம் எங்களால் மாணவர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை. எங்களுடைய பொறுப்புகளை நாங்கள் செய்து வருகிறோம். துணைவேந்தர் அவருடைய பொறுப்பை சரியாக செய்யவில்லை என நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம்.
ஓய்வூதிய சங்க செயலாளர் சுவாமிநாதன் பேசுகையில்: எங்களுக்கு சம்பளமும் ஓய்வூதியமும் வழங்கப்படவில்லை தமிழக அரசு எங்கள் வாழ்வாதாரத்தை கவனத்தில் கொண்டு ஒன் டைம் அமௌன்ட் அல்லது மார்ச் மாதத்திற்கான ஊதிய பலன்கள் அளித்தால் சமாளிப்போம். அல்லது மூன்று மாதத்திற்கு பிறகு சட்டபூர்வமாக ஓய்வூதியத்தை வழங்கலாம். எங்களிடம் ஊதியமும் இல்லை ஓய்வூதியமும் இல்லை இதனை கருத்தில் கொண்டு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
