சென்னைக்கு 400 மாநகராட்சி பணியாளர்களை அனுப்பிய மதுரை மேயர்

X
சென்னையில் சீரமைப்பு பணிக்கு400 மாநகராட்சி பணியாளர்களை மதுரையிலிருந்து சென்னைக்கு மாநகராட்சி மேயர் அனுப்பி வைத்தார்
சென்னையில் சீரமைப்பு பணிக்கு400 மாநகராட்சி பணியாளர்களை மதுரையிலிருந்து சென்னைக்கு மாநகராட்சி மேயர் அனுப்பி வைத்தார்
மிக்ஜாம் புயல் மீட்பு நடவடிக்கைக்காக மாநகராட்சி பணியாளர்களை மேயர் இந்திராணி பொன்வசந்த் அனுப்பி வைத்தார். மதுரை மாநகராட்சியின் சார்பில் மிக்ஜாம் புயல் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு மீட்பு பணிகள் மேற்கொள்ள தூய்மை பணியாளர்களை மேயர் இந்திராணி பொன்வசந்த் அவர்கள், ஆணையாளர் லிமதுபாலன் ஆகியோர் இன்று (04.122023)அனுப்பி வைத்தனர். தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மிக்ஜாம் புயலினால் மழை அதிகளவில் பெய்து வருகிறது. குறிப்பாக சென்னை கடலூர், திருவள்ளுர், விழுப்புரம், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் அதிகமான அளவில் மழை பெய்து வருகிறது. நேற்று முதல் சென்னை மாநகரத்தில் அதிகளவு மழை பெய்து வருகிறது. இதனால் பொதுமக்கள் அதிகளவில் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனா். பொதுமக்களை பாதுகாக்கும் வகையிலும், வெள்ள நிவாரண பணிகள் மற்றும் சுகாதாரப் பணிகள் மேற்கொள்ளவும் மதுரை மாநகராட்சி ஐந்து மண்டலங்களில் இருந்து சுமார் 400 தூய்மை பணியாளர்கள், 9 சுகாதார மேற்பார்வையாளர்கள், 4 சுகாதார ஆய்வாளர்கள் 1 சுகாதார அலுவலர் சென்னை பெருநகரத்திற்கு மீட்பு பணிகள் மேற்கொள்வதற்காக 5 பேருந்துகளில் சென்னைக்கு அருகில் உள்ள கூடுவாஞ்சேரி பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் தங்கி அங்கிருந்து சென்னை. நகராட்சி நிர்வாக இயக்குநர் அவர்களின் வழிகாட்டுதலின்படி மீட்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளனர். இந்நிகழ்வில் மண்டலத் தலைவர்கள் சரவண புவனேஸ்வரி, பாண்டிச் செல்வி, முகேஷ்சர்மா நகர்நல அலுவலர் மரு.வினோத்குமார். உதவி நகர்நல அலுவலர் மருபூபதி மக்கள் தொடர்பு அலுவலர் மகேஸ்வரன், உதவிப்பொறியாளர் (வாகனம்) ரிச்சார்டு, சுகாதார அலுவலர்கள் ராஜ்கண்ணன், சிவசுப்பிரமணியன், சுகாதார ஆய்வாளர்கள் உட்பட மாநகராட்சி அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
Tags
Next Story
