மதுரை மீனாட்சி அம்மன் கோயில்களில் ரூ.1.22 கோடி உண்டியல் வசூல்

மதுரை மீனாட்சி அம்மன் கோயில்களில் ரூ.1.22 கோடி உண்டியல் வசூல்

உண்டியல் காணிக்கை எண்ணும் பணி

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் மற்றும் உபகோயில்களில் உண்டியல் காணிக்கையாக ரூ.1.22 லட்சத்தை பக்தர்கள் செலுத்தியுள்ளனர்.
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் மற்றும் 10 உபகோயில்களில் பக்தர்கள் காணிக்கை செலுத்துவதற்கான உண்டியல்கள் வைக்கப்பட்டுள்ளன. இந்த கோயில்களில் உள்ள உண்டியல் காணிக்கை கோயிலின் இணை ஆணையர் கிருஷ்ணன் முன்னிலையில் எண்ணப்பட்டது.இதில் ரொக்கம் ரூ 1 கோடியே 22 லட்சத்து 5 ஆயிரத்து 504, தங்கம் 819 கிராம், வெள்ளி 642 கிராம் மற்றும் அயல் நாட்டு நோட்டுக்கள் 251 கிடைக்கபெற்றன. உண்டியல் திறப்பின் போது மதுரை, இந்து சமய அறநிலையத்துறை, உதவி ஆணையர், திருக்கோயில் அறங்காவலர் குழுத் தலைவர் பிரதிநிதி. திருக்கோயில் அறங்காலர்கள். திருக்கோயில் கண்காணிப்பாளர்கள், மதுரை (தெற்கு) மற்றும் மதுரை (வடக்கு) சரக ஆய்வர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்

Tags

Next Story