மதுரை மீனாட்சி கோவில்: அர்ச்சகர் பயிற்சி சேர்க்கை அறிவிப்பு

மதுரை மீனாட்சி கோவில்: அர்ச்சகர் பயிற்சி சேர்க்கை அறிவிப்பு

மதுரை மீனாட்சி கோவிலில் 2024-2025ஆம் ஆண்டிற்கான அர்ச்சகர் பயிற்சிக்கான சேர்க்கை அறிவிக்கப்பட்டுள்ளது.


மதுரை மீனாட்சி கோவிலில் 2024-2025ஆம் ஆண்டிற்கான அர்ச்சகர் பயிற்சிக்கான சேர்க்கை அறிவிக்கப்பட்டுள்ளது.

மதுரை மீனாட்சி கோவில்: 2024-2025ஆம் ஆண்டிற்கான அர்ச்சகர் பயிற்சி சேர்க்கை அறிவிப்பு மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் சார்பில் நடத்தப்படும் ஓதுவார் பயிற்சி பள்ளி/ அர்ச்சகர் பயிற்சி பள்ளியில் 2024-2025ஆம் ஆண்டுக்கான சேர்க்கை நடைபெற்று வருவதாக கோவில் செயல் அலுவலர் கிருஷ்ணன் அறிவிப்பு.

இந்து சமய அறநிலையத் துறையின் சார்பாக திருக்கோயில்களில் திருமுறைகளை குறைவின்றி பாடுவதற்காகவும், அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற திட்டத்தின்படியும் 2024-2025ஆம் ஆண்டுக்கான ஓதுவார்/ அர்ச்சகர் பயிற்சி பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை நடைபெற்று வருகிறது. ஓதுவார் பயிற்சி பள்ளியில் மூன்றாண்டு சான்றிதழ் படிப்பிலும் மற்றும் அர்ச்சகர் பயிற்சி பள்ளியில் ஓராண்டு சான்றிதழ் படிப்பிலும் சேரும் மாணவர்களுக்கு இலவசமாக உணவு, உடை, தங்குமிடம் மற்றும் மருத்துவ வசதியுடன் மாதந்தோறும் ரூ.4,000/-ஊக்கத் தொகையாகவும் வழங்கப்படுகிறது.

இவ்விரு பயிற்சிகளிலும் சேர விரும்பும் மாணவர்கள் இந்து சைவ சமயக் கோட்பாடுகளை கடைபிடிப்பவராகவும், 8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றும், தமிழ் எழுதப் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும். ஓதுவார் பயிற்சி பெற விரும்புவோருக்கான வயது தகுதி 13 முதல் 20 ஆகவும், அர்ச்சகர் பயிற்சி பெற விரும்புவோர் வயது தகுதி 14 முதல் 24 ஆகவும் இருக்க வேண்டும். இப்பயிற்சிக்கான விண்ணப்பங்களை மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோவில் இணையதளமான https://maduraimeenakshi.hrce.tn.gov.in - மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் இணை ஆணையர்/ செயல் அலுவலர், அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில், மதுரை என்ற முகவரிக்கு 19.07.2024ஆம் தேதி மாலை 05.45 மணிக்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.

மேலும் விவரங்கள் தெரிந்து கொள்ள அலுவலக நேரத்தில், அலுவலக நாட்களில் திருக்கோயில் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என செயல் அலுவலர் கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story