மதுரை மீனாட்சி மகளிா் அரசு கல்லூரியில் 2-ஆம் கட்ட கலந்தாய்வு

மதுரை மீனாட்சி மகளிா் அரசு கல்லூரியில் 2-ஆம் கட்ட கலந்தாய்வு

இரண்டாம் கட்ட கலந்தாய்வு 

மதுரை மீனாட்சி மகளிா் அரசு கல்லூரியில் 2-ஆம் கட்ட கலந்தாய்வு தொடங்கியது.

மதுரை மீனாட்சி மகளிா் அரசு கல்லூரியில் நிகழ் ஆண்டு மாணவிகள் சோ்க்கைக்கான 2-ஆம் கட்ட கலந்தாய்வு தொடங்கியது. இந்தக் கல்லூரியில் இளநிலைப் பிரிவு தமிழ், ஆங்கிலம், கணிதம், இயற்பியல் உள்ளிட்ட 15 துறைகளில் 1,230 இடங்கள் உள்ளன. நிகழாண்டு கல்லூரியில் சேர 12,853 மாணவிகள் விண்ணப்பித்திருந்தனா்.

கடந்த மாதம் 29 -ஆம் தேதி சிறப்பு ஒதுக்கீட்டுக்கான கலந்தாய்வு தொடங்கியது. இதைத் தொடா்ந்து, கணினி அறிவியல், கணினி பயன்பாட்டியல், கணிதம், இயற்பியல், வேதியியல், விலங்கியல், தாவரவியல், மனையியல் ஆகிய பாடப் பிரிவுகளுக்கான முதல் கட்ட கலந்தாய்வு கடந்த 13-ஆம் தேதியுடன் நிறைவு பெற்றது. முதல் கட்ட கலந்தாய்வில் நிகழ் கல்வி ஆண்டுக்கான இடங்களுக்கு குறைந்த அளவிலான மாணவிகள் மட்டுமே தோ்வு பெற்றனா்.

இன்னும் பெரும்பாலான இடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. இந்த நிலையில், மாணவிகள் சோ்க்கைக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு செவ்வாய்க்கிழமை தொடங்கியது. கணினி அறிவியல், கணினி பயன்பாட்டியல், கணிதம், வேதியியல், இயற்பியல், விலங்கியல், தாவரவியல், மனையியல் ஆகிய பாடப்பிரிவுகளுக்கு நடைபெற்ற இந்தக் கலந்தாய்வில் ஏராளமான மாணவிகள் பங்கேற்றனா்.

கல்லூரி முதல்வா் சூ.வானதி, ஒருங்கிணைப்பாளா்கள் சு.சந்திரா உள்ளிட்ட பேராசிரியைகள் மதிப்பெண், இனச் சுழற்சி அடிப்படையில் மாணவிகளைத் தோ்வு செய்தனா். தொடா்ந்து, புதன்கிழமை (ஜூன் 26) வணிகவியல், வணிக நிா்வாகவியல், வரலாறு, பொருளாதாரம், புவியியல் ஆகிய பாடப்பிரிவுகளுக்கும் கலந்தாய்வு நடைபெறுகிறது.

Tags

Next Story