மதுரை பாராளுமன்ற பாஜ வேட்பாளர் இராம ஸ்ரீனிவாசன்

மதுரை பாராளுமன்ற பாஜ வேட்பாளர் இராம ஸ்ரீனிவாசன்

 மதுரை பாராளுமன்ற பாஜ., வேட்பாளராக ராம ஸ்ரீனிவாசன் அறிவிக்கப்பட்டுள்ளார். 

மதுரை பாராளுமன்ற பாஜ., வேட்பாளராக ராம ஸ்ரீனிவாசன் அறிவிக்கப்பட்டுள்ளார்.

பேராசிரியர் டாக்டர் இராம ஸ்ரீநிவாசன்.இவர் பாஜக மாநில செயலாளர் ஆவர். இவர் மதுரை மாவட்டம் தே கல்லுப்பட்டியில் பிறந்தார்.ஆரம்பக் கல்வி காந்தி நிகேதன் ஆசிரமத்திலும் தே கல்லுப்பட்டியில் உயர் கல்வியையும் பயின்றார்.காந்திய தத்துவத்தில் முனைவர் பட்டம் பெற்றவர்.1964 இல் பிறந்த பேராசிரியர் டாக்டர் இராம ஸ்ரீநிவாசன் , தஞ்சாவூரில் உள்ள சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தில் மேலாண்மைப் பள்ளியில் இணைப் பேராசிரியராக பணியாற்றினார்.

பல்கலைக்கழகங்கள் மற்றும் புகழ்பெற்ற கல்லூரிகளில் பல படிப்புகளின் உறுப்பினராக பணியாற்றினார். அறிவுசார் உலகில் பல ஆய்வுக் கட்டுரைகள் மற்றும் கட்டுரைகளை எழுதியுள்ளார்.மேலும் இவர் PHD பட்டங்களையும் பெற்றுள்ளார்.தஞ்சாவூரில் உள்ள சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தில் டாக்டர் கலாம் கிராம மேம்பாட்டு ஆய்வு மையத்தைத் தொடங்குவதில் முக்கியப் பங்காற்றியுள்ளார். பேராசிரியர் டாக்டர் இராம ஸ்ரீநிவாசன் 2019 முதல் 2022 வரை கொங்கன் ரயில்வேயில் தனி இயக்குநராகவும்.மதுரை காந்திய சிந்தனைக் கல்லூரியில் கவுரவ பீடமாகவும், சுதேசி விழிப்புணர்வு இயக்கத்தின் மாநில இணை ஒருங்கிணைப்பாளராகவும் இருந்துள்ளார்.

விவேகானந்த கேந்திராவில் தேசிய உறுப்பினராகவும் உள்ளார். இது மட்டுமல்லாமல் நபார்டு வங்கியின் தனிநிலை இயக்குனராக தற்போது அங்கம் வகித்து இருக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.கார்ப்பரேட் மற்றும் கல்வித்துறையில் அவருக்கு விரிவான அனுபவம் உள்ளது. ஒரு வலுவான சிந்தனை தூண்டுபவராக, இந்திய வணிக மாதிரிகள், இந்திய நெறிமுறைகள் மற்றும் மேலாண்மை, இந்தியப் பொருளாதாரம் போன்ற உள்நாட்டுத் தொடர்புடைய மேலாண்மை பாடங்களில் நிபுணத்துவம் பெற்றவர். இவர் பல ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டுள்ளார் மற்றும் பல புத்தகங்களை மதிப்பாய்வு செய்துள்ளார் மற்றும் NCC (கடற்படை) 'B' சான்றிதழ் பெற்றவர் ... 1983ல் விசாகப்பட்டினத்தில் நடந்த அகில இந்திய NCC கடற்படை முகாமில் தங்கப் பதக்கம் வென்றவர்... அவரது வாழ்நாள் முழுவதும் அவர் ஒரு சமூக ஆர்வலராகவும் சமரசமற்ற தேசியவாதியாகவும் இருக்கின்றார்... தற்போது பாரதிய ஜனதா கட்சியின் மாநில பொதுச் செயலாளராக இருக்கின்றார்...

2016ம் வருடம் மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தொகுதியில் சட்டமன்ற இடைத்தேர்தலில் வேட்பாளராக போட்டியிட்டு களம் கண்டார்... எய்ம்ஸ் மருத்துவமனை மதுரையில் வருவதற்கு வித்திட்டவர் இவர்... தேவேந்திர குல வேளாளர் அரசாணை வெளியிடுவதற்கும் மாவீரர் அழகுமுத்துக்கோன் யாதவ் அஞ்சல் தலை வெளியீடு செய்ததில் பெரும் பங்கு பேராசிரியர் முனைவர் இராம ஸ்ரீநிவாசன் அவர்களையே சேரும்... விருதுநகர் மாவட்டத்தின் தீப்பெட்டி தொழிற்சாலை பாதுகாப்பதற்கு சீனாவின் சிகார் லைட்டுகள் இறக்குமதி வரியை அதிகரித்து நான்கு லட்சம் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை காப்பாற்றுவதற்கு பல முயற்சிகளை மேற்கொண்டு அதில் வெற்றியும் கண்டார்.

குறிப்பாக பட்டாசுக்கு 25 சதவீதம் ஜிஎஸ்டி வரியை குறைக்க சிவகாசி பட்டாசு தொழிலாளர்கள் கோரிக்கையை ஏற்று ஜிஎஸ்டி வரியை 18 சதவீதமாக குறைக்க ஏற்பாடுகளை மேற்கொண்டார்... மேலும் சாத்தூர் கோவில்பட்டி தீப்பெட்டி தொழிற்சாலைகளுக்கு 18 சதவீதம் ஜிஎஸ்டி வரியில் இருந்து 12 சதவீதமாக குறைப்பதற்கு வழி செய்தார்... சிவகாசியில் பட்டாசு தொழில் முற்றிலும் முடங்கிவிடும் சூழல் ஏற்பட்டபோது நேரடியாக பிரதம மந்திரியின் பார்வைக்கு எடுத்துச் சென்று சிவகாசி மக்களின் வாழ்வாதாரத்தை காப்பாற்றினார்... சிவகாசி மக்களின் கோரிக்கையை ஏற்று கொல்லம் விரைவு ரயில் சிவகாசியில் நின்று செல்வதற்கு மத்திய அரசிடம் மேல்முறையீடு செய்தார்...

விருதுநகர் மாவட்டத்தில் 2000 கோடி ரூபாயில் மத்திய அரசின் ஜவுளி பூங்கா வருவதற்கான ஏற்பாடுகளைச் செய்து தொழில்துறையில் முன்னேற துடிக்கும் மாவட்டமாக அறிவிக்க வழிவகை செய்தார்... தென் மாவட்டங்களில் பாரதிய ஜனதா கட்சி இன்று வலுவாக இருப்பதற்கு பேராசிரியர் இராம ஸ்ரீநிவாசன் இரவு பகல் பாராமல் உழைத்த உழைப்பிற்கு கிடைத்த பலன் என்று கூறினால் அது மிகையாகாது... டிவி விவாதங்களிலும் கட்சி பொது மேடை பேச்சுகளில் இன்றளவிலும் மக்களிடம் அதிக வரவேற்பு பெற்றவர் என்று கூறலாம்...

Tags

Next Story