காப்பாற்றப்பட்டது மதுரை ரயில்வே மைதானம்

காப்பாற்றப்பட்டது மதுரை ரயில்வே மைதானம்

மதுரை ரயில்வே மைதானம் காப்பாற்றப்பட்டுள்ளது என எம்.பி., .வெங்கடேசன் கூறியுள்ளார். 

மதுரை ரயில்வே மைதானம் காப்பாற்றப்பட்டுள்ளது என எம்.பி., .வெங்கடேசன் கூறியுள்ளார்.

மதுரைரயில்வே மைதானம் காப்பாற்றப்பட்டுள்ளது: சு.வெங்கடேசன் எம்.பி. தகவல் மதுரை ரயில்வே மைதானத்தை ஒப்பந்த அடிப்படையில் தனி யாரிடம் ஒப்படைக்கவில்லை, என தெற்கு ரயில்வே மேலாளர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளதால் ரயில்வே மைதானம் காப்பாற்றப்பட்டுள்ளது, என மதுரை தொகுதி எம்.பி.சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.

மதுரையில் ரயில் நிலைய அலுவலகத்தில், ரயில்வே திட்டங்கள் குறித்து தெற்கு ரயில்வே பொதுமேலாளர் ஆர்.என்.சிங் தலைமையில், எம்.பி.க்கள் உடனான ஆலோ சனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பங்கேற்ற பின், சு.வெங்கடேசன் எம்.பி. செய்தியாளர்களிடம் கூறியதாவது: மதுரை ரயில்வே மைதானத்தை ஒப்பந்த அடிப்படையில் தனியாரிடம் ஒப்படைக்கவில்லை, என தெற்கு ரயில்வே பொது மேலாளர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். கடந்த 6 மாத கால போராட்டத்தால், தனியாரிடம் செல்லவிருந்த மதுரை ரயில்வே மைதானம் காப்பாற்றப்பட்டுள்ளது

. மேலும், கடந்த ஓராண்டாக எழுப்பிய 18 கோரிக்கைகளுக்கு பொது மேலாளர் பதிலளித்துள்ளார். தூத்துக்குடி - மேட்டுப்பாளையம் இடையே வாரத்துக்கு ஒரு முறை இயக்கப் பட்ட ரயில், இனி 3 முறை இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றார்.

Tags

Next Story