அரசு நிலம் விற்பனை - கிறிஸ்தவ அமைப்பினர் புகார்
தமிழ்நாடு கிறிஸ்தவ சீர்திருத்த சங்க மாநில தலைவர் தேவசகாயம் தலைமையில் கிறிஸ்தவ அமைப்பினர் போலீஸ் கமிஷ்னர் லோகநாதனிடம் அளித்த புகார் மனுவில கூறியிருப்பதாவது, நான் கிறிஸ்துவ சீர்த்திருத்த மக்கள் சங்கதலைவராக இருக்கிறேன்.
மதுரை மாநகராட்சி,புதூர் பகுதியில் அமைந்துள்ள இரட்சணியபுரத்தில் தமிழக அரசு ஏழை விதவைப்பெண்கள், கண்பார்வையற்றோர் மற்றும் ஆதரவற்ற குழந்தைகளுக்கள்நலனுக்காகவும், முன்னேற்றத்திற்காகவும் அமெரிக்கன் மிஷின் போர்டுக்கு கொடுக்கப்பட்ட சுமார் ரூபாய 933 கோடி மதிப்பிலான 31.10 ஏக்கர் நிலப்பரப்பு கொண்ட அரசு இடத்தை கடந்த 2008 ஆம் ஆண்டு சிஎஸ்ஐ அமைப்பின மதுரை நிர்வாகிகள் பெர்ணான்டஸ் ரத்தின ராஜா. பெயிண்ட்கடை ஜான்சன் இஸ்ரேல், முன்னாள் பேராயர் ஜோசப் ஆகிய மூவரும் சேர்ந்து போலி ஆவணங்கள் தயார் செய்து அடுக்குமாடி குடியிருப்பு கட்டுகின்ற கம்பெனிகளுக்கும், கடைகள், மற்றும் வணிக வளாகங்கள் கட்டி விற்பனை செய்ததை எதிர்த்து கடந்த 2022 ம் ஆண்டு மதுரை உயர்நீதி மன்ற கிளையில் வழக்கு தொடரப்பட்டது.
இதைபடுத்து மதுரை உயர்நீதி மன்ற கிளை விசாரித்து மாநில நில நிர்வாக ஆணையர் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டது. அதனை தொடர்ந்து நிலநிர்வாக ஆணையர் ஆய்வு நடத்தி ஆக்கிரமிப்பு இடம் அரசுக்கு சொந்தமானது என்று உறுதி செய்து அறிக்கை தாக்கல செய்தார் அதன்படி ஆக்கிரமிப்பு இடத்தை அரசு கையகப்படுத்தி உள்ளது. எனவே அரசு இடத்தை போலி ஆவணம் தயார் செய்து விற்பனை செய்த சிஎஸ் ஐ அமைப்பின் மதுரை நிர்வாகிகள் பொணான்டஸ் ரத்தின ராஜா, பெயிண்ட்கடை ஜான்சன் இஸ்ரேல் முன்னாள் பேராயர் ஜோசப் ஆகிய மூவர் மீதும் குற்றவியல் நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளது.