மதுரையை இரண்டாம் தலைநகரமாக மாற்றப்பட வேண்டும்

மதுரையை இரண்டாம் தலைநகரமாக மாற்றப்பட வேண்டும்

க.திருமுருகன்

மதுரையர் இயக்கம் மற்றும் தமிழ்நாடு அப்பளம் வடகம் மோர் வத்தல் சங்க அறிக்கை

நாடு முழுவதும் 45% வாக்கு வங்கி வணிகர்கள் கையில் இருக்கின்றது. கொரோனா பிறகு 30 % சிறு குறு நிறுவனங்கள் காணாமல் போய்விட்டது. வங்கியில் வாங்கப்பட்ட கடனுக்கு கவனத்தொகை கட்ட முடியவில்லை அதனால் சிறு குறு தொழில்கள் வரா கடனாக சென்று விட்டது (MPஆன அக்கவுண்டுக்கு) டோல்கேட் கட்டண உயர்வால் வாடகை இரண்டு மடங்காக ஆகிவிட்டது. 60 கிலோ மீட்டருக்கு ஒரு டோல்கேட் தான் இருக்க வேண்டும் மற்றும் 10 ஆண்டுகளுக்ககு மேல் இயங்கும் டோல் கேட்டுகளை அகற்றப்பட வேண்டும். GSTயில் குறியீட்டு எண் (HSN) தெளிவாக குறிப்பிடப்படவில்லை.

இதனால் வரி குழப்பங்கள், வரி இல்லாத பொருட்களுக்கும் வரி இருப்பதாக அதிகாரிகள் தொடர்ந்து அச்சுறுத்தி வருவது மட்டுமல்லாமல் மாநில அரசு பறக்கும் படை என்ற அமைத்து அதில் அதிகாரிகள் கூட வரி உள்ள பொருள் எது வரியில்லா பொருள் எது என்று கூட தெரியாமல் வாகனங்களை நிறுத்தி தேவையில்லாத பிரச்சினையில் கொண்டு வந்து வியாபாரிகளுக்கு மனச் சுமையை உருவாக்கி மன அழுத்தத்தை உருவாக்கி விடுகிறார்கள். ஒரு நாள் அனைத்து பொருட்களுக்கும் தனித்தனியாக குறியீட்டு எண் கொடுக்கப்பட வேண்டும் அதன் பிறகு வரியை நிர்ணயிக்க வேண்டும் அதுவரைக்கும் ஜிஎஸ்டியை நிறுத்தி வைக்க வேண்டும் சிறு குறு நிறுவனங்களில் மின்சார கட்டணம் கடுமையான உயர்ந்து உள்ளது.

அதுமட்டுமில்லாமல் நிறுவனம் தயார் செய்கின்ற சோலார் மின்சாரத்திற்கும் மின்சார வாரியம் கட்டணம் வசூல் செய்வது வருந்தத்தக்கது. உணவுப் பொருட்கள் தயாரிப்பாளர்களுக்கு அடிப்படை வசதியான ஆய்வுக்கூடங்கள் அரசு ஏற்படுத்த வேண்டும் மதுரை 6000 ஆண்டு பழமையானது ஆனால் மதுரை வளர்ச்சி வீழ்ச்சியை நோக்கி தான் சென்று கொண்டிருக்கிறது காரணம் தொழில் துறைக்கான உள்கட்டமைப்பு வசதி செய்து கொடுப்பதில்லை விமான பன்னாட்டு நிறுவனமாக அறிவித்தும் அதன் செயல்பாடுகள் இல்லாமல் இருக்கிறது எய்ம்ஸ் மருத்துவமனை வருகிறது என்று சொன்னார்கள் அதற்கான வேலைப்பாடுகள் நடந்ததாக தெரியவில்லை மதுரை மாவட்டத்தை சுற்றுலாத்தலமாக மாற்றப்பட வேண்டும் என்று சொல்லப்பட்டது அதுவும் இதுவரை நடைபெறவில்லை.

குறிப்பாக தமிழகத்தில் மதுரையை இரண்டாம் தலைநகராக மாற்றினால் மட்டுமே வளர்ச்சி அடையும் 6000 வருடம் பழமையான நகரத்தை இரண்டாம் தலைநகரமாக மாற்றுவதற்கு எது தடைக்கல்லாக இருக்கிறது என்று தெரியவில்லை. எனவே மத்திய மாநில அரசுகள் உடனடியாக காலம் தாழ்த்தாமல் மதுரையை இரண்டாம் தலைநகரமாக மாற்றப்பட வேண்டும். நாட்டில் முதுகெலும்பாக இருக்கும் எம் எஸ் எம் இ நிறுவனங்களுக்கு காப்பாற்றப்பட வேண்டும். அவ்வாறு காப்பாற்றப்பட்டால் மட்டுமே நாட்டில் பொருளாதார வளர்ச்சி அடையும் என்று தமிழ்நாடு அப்பளம் வடகம் மோர் வத்தல் சங்கத்தின் மாநிலத் தலைவர் டாக்டர் க.திருமுருகன் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story